மட்டக்குளியில் கார் நிறுத்த காரணம் தொழில்நுட்பக் கோளாறே; சந்தேகத்திற்கிடமானதல்ல | தினகரன்


மட்டக்குளியில் கார் நிறுத்த காரணம் தொழில்நுட்பக் கோளாறே; சந்தேகத்திற்கிடமானதல்ல

மட்டக்குளி பகுதியில் பாடசாலைக்கும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கும் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தொடர்பில் கிடைத்த தகவலை தொடர்ந்து மட்டக்குளி பொலிஸார் விசாரணை நடத்தினர்.

குறித்த பகுதியில் சோதனை செய்தபோது, சொகுசு காரொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாகனத்தை அதன் உரிமையாளர் நேற்றிரவு (15) அவ்விடத்தில் கைவிட்டுச் சென்றதாக தொடர்ச்சியான சோதனையின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அருகிலுள்ள பாடசாலை மாணவர்களும் பெற்றோரும், வாகன உரிமையாளர் இன்றி  சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட குறித்த வாகனம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, குறித்த வாகனத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில், வாகனத்தினுள் சந்தேகத்திற்கிடமான பொதி இருப்பதாக வதந்தி பரவியது.

குறித்த வாகனத்தினுள் சந்தேகத்திற்கிடமான பொதி எதுவும் இல்லை எனவும் வதந்திகளை கேட்டு பதற்றம் அடைய வேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 


Add new comment

Or log in with...