ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கு தயார் | தினகரன்


ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கு தயார்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுக்களை வெளியிடுதல் மற்றும் தபாலகங்களில் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்குச்சீட்டுக்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை நேற்று (15) இடம்பெற்றது.

அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு துறையில் தபால்மூல வாக்காளர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு  எதிர்வரும் ஒக்டோபர் 31 மற்றும் நவம்பர் 01ஆம் திகதி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகங்கள், தேர்தல்கள் அலுவலகம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு நவம்பர் 04ஆம் திகதி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள், நவம்பர் 07ஆம் திகதி வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்களை தபாலகங்களில் ஒப்படைக்கும்  நடவடிக்கை, எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்க நவம்பர் 03ஆம் திகதி சிறப்பு நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை  விநியோகிக்கும் நடவடிக்கையின் இறுதிநாள் நவம்பர் 09ஆம் திகதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


Add new comment

Or log in with...