Tuesday, April 23, 2024
Home » அலி சப்ரி ரஹீம் எம்.பி. பயணித்த வாகனம் விபத்து

அலி சப்ரி ரஹீம் எம்.பி. பயணித்த வாகனம் விபத்து

- விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது

by Prashahini
February 13, 2024 12:00 pm 0 comment

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.

இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15 ஆம் அஞ்சல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கம, மேல் புளியங்குளிம பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த சொகுசு ஜீப் வாகனம், முன்னால் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் உறுப்பினரின் காரின் சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT