புதிய Galaxy A தெரிவுகளுக்கு விசேட சலுகை | தினகரன்


புதிய Galaxy A தெரிவுகளுக்கு விசேட சலுகை

இலங்கையில் காணப்படும் முதல் தர ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான Galaxy டயலொக் அக்ஸியாடா பிஎல்சியுடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Galaxy A தெரிவுகளுடன் விசேட சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது.

புதிய Galaxy A தெரிவு ஸ்மார்ட்ஃபோனை இடமிருந்து வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் போது, வரையறையற்ற YouTube மற்றும் Premium Dialog ViU பாவனையை மூன்று மாத காலப்பகுதிக்கு இலவசமாக அனுபவிக்கக்கூடிய Dialog 4G SIM அட்டை ஒன்றை பெற்றுக் கொள்ளலாம். இதனூடாக, தமக்கு விருப்பமான சகல உள்ளடக்கங்களையும் புதிய Galaxy A தெரிவு ஸ்மார்ட்ஃபோன்களில் டேடா தீர்ந்துவிடாமல் பார்வையிட முடியும்.

இந்த சலுகையினுௗடாக வாடிக்கையாளர்களுக்கு பெருமளவான களிப்பூட்டும் மற்றும் அறிவார்ந்த உள்ளம்சங்களை லுழரவுரடிந இல் பார்வையிட முடியும் என்பதுடன், Dialog ViU ஐ பயன்படுத்தவும் முடியும். தமக்கு விருப்பமான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகள் என இவற்றில் எதுவாக இருந்தாலும், இந்த சலுகையினுௗடாக, தமது புதிய Galaxy A சாதனத்தில் இடைவிடாத களிப்பூட்டும் அம்சங்களை பார்த்து மகிழலாம். இந்த சலுகைக்கு மேலும் மெருகேற்றும் வகையில், இலவச 4G SIM ஒன்றும் வழங்கப்படுகின்றது.

Dialog 4G SIM அட்டைகள் செயற்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சாதனங்களில் 2019 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 2019 டிசம்பர் 31ஆம் திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும். செயற்படுத்தப்பட்டது முதல் 3 மாத காலப்பகுதிக்கு செல்லுபடியாகும்.

புதிய Samsung Galaxy A தெரிவுகள் இளைஞர்களுக்காக புதிய மற்றும் புத்தாக்கமான உள்ளம்சங்களை கொண்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் அதிகளவு பாவனையை கொண்டவர்களுக்கு இடைவிடாத களிப்பூட்டும் அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.


Add new comment

Or log in with...