83,000 லீற்றர் கள்ளு பறிமுதல்: ஒருவர் கைது | தினகரன்


83,000 லீற்றர் கள்ளு பறிமுதல்: ஒருவர் கைது

அளுத்கம, களுவாமோதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 83,000 லீற்றர் கள்ளு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட கள்ளு தவறணை நிலையம் முற்றுகையிடப்பட்டது.

குறித்த நிலையத்திலிருந்து 83,000 லீற்றர் கள்ளு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதன் உரிமையாளரான 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...