கோட்டா குடியுரிமை எதிரான மனு: நிராகரிப்புக்கான காரணம் இன்று அறிவிப்பு | தினகரன்


கோட்டா குடியுரிமை எதிரான மனு: நிராகரிப்புக்கான காரணம் இன்று அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமைக்கு சவால் விடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட றிட் மனு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) வெளியிடவுள்ளது.   கோட்டாபய ராஜபக்ஷ தான் ஒரு இலங்கைப் பிரஜையெனக்கூறுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட றிட் மனுவை மேன்முறையீட்டு நிதிமன்றம் கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதியன்று நிராகரித்தது.  

ஜனநாயக செயற்பாட்டாளர் காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி றிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளடங்கிய குழு நிராகரித்தது.  

எனினும் அதற்கான காரணம் அன்றைய தினம் அறிவிக்கப்படவில்லை. பிறிதொரு தினத்தில் அறிவிப்பதாக கூறியிருந்தது. இந்நிலையில் இதற்கான காரணம் இன்று வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Add new comment

Or log in with...