Tuesday, April 23, 2024
Home » அமெரிக்க நிறுவனம், பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கிடையில் ஒப்பந்தம்

அமெரிக்க நிறுவனம், பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கிடையில் ஒப்பந்தம்

by damith
February 13, 2024 6:45 am 0 comment

Shell RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு முனையத்தில் களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. உள்நாட்டு எரிபொருள் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்துவிட்ட பின்னர், இலங்கையில் முதலீடு செய்த அமெரிக்காவை தளமாகக் கொண்ட Shell – RM Parks நிறுவனத்திற்கும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொலன்னாவையிலுள்ள பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 08 ஆம் திகதி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் மற்றும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சு ஆகியன இது தொடர்பான முன்னோடி உடன்படிக்கையில் 2023.07.08 இல், கைசாத்திட்டிருந்தன.

இந்நிலையில் உரிய எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்திருந்தார்.இந்நிலையிலே, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

லோரன்ஸ்செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT