கலிபோர்னியாவில் விலங்கு ரோமப் பொருட்களுக்கு தடை | தினகரன்


கலிபோர்னியாவில் விலங்கு ரோமப் பொருட்களுக்கு தடை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் விலங்குகளின் ரோமத்தைக் கொண்டு பொருட்களைத் தயாரிக்கவோ, விற்கவோ தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் அத்தகைய தடையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக கலிபோர்னியா பதிவாகியுள்ளது.

அங்குள்ள குடியிருப்பாளர்கள் விலங்குகளின் ரோமத்தைக் கொண்டு ஆடைகள், காலணிகள், கைப்பைகள் ஆகிய பொருட்களை உருவாக்கவோ விற்கவோ முடியாது. அந்தத் தடை 2023ஆம் ஆண்டு நடப்புக்கு வரவுள்ளது.

அத்தகைய தடைக்கு நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்த விலங்குரிமை குழுக்கள் அதைப் பெரிதும் வரவேற்றுள்ளன.

கலிபோர்னியாவின் ஆளுநர் கெவின் நியூசோம் விலங்குகளைக் கொண்டு வித்தை காட்டுவதற்கும் தடை விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

சட்டத்தை மீறுவோருக்கு 500 டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.


Add new comment

Or log in with...