நேபாளத்தில் பஸ் பள்ளத்தில் விழுந்து 11 பேர் உயிரிழப்பு | தினகரன்


நேபாளத்தில் பஸ் பள்ளத்தில் விழுந்து 11 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் அளவுக்கதிகமான பயணிகளுடன் மலைப்பாதையில் பயணித்த பஸ் வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேபாள நாட்டில் இந்துக்களால் கொண்டாடப்படும் தசைன் பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள் சிலர் சிந்துபால் செளக் பகுதியிலிருந்து பஸ் வண்டியில் தலைநகர் காத்மண்டூவுக்கு சென்றுள்ளனர்.

அளவுக்கதிகமான பயணிகளுடன் கூட்டம் நிரம்பி வழிந்தவாறு மலைப்பாதையில் சென்ற அந்த பஸ் வளைவு ஒன்றில் திரும்புகையில் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மேலும் 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் 108 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களுள் 39 பேர் மட்டுமே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...