ஹத்துருசிங்க நீக்கம்; ஜெரோமி ஜயரத்ன பதில் தலைமை பயிற்றுவிப்பாளர் | தினகரன்


ஹத்துருசிங்க நீக்கம்; ஜெரோமி ஜயரத்ன பதில் தலைமை பயிற்றுவிப்பாளர்

ஹத்துருசிங்க நீக்கம்; ஜெரோமி ஜயரத்ன பதில் பயிற்றுவிப்பாளர்-Chandika Hathurusingha Removed As Coach-Jerome Jayaratne Appointed as Acting Coach

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்கவை நீக்க இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவரை குறித்த பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்கா வேண்டாம் என விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ விடுத்த உத்தரவுக்கு அமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சோபிக்க தவறியதை அடுத்து, பங்களாதேஷ் ஒரு நாள் தொடருக்குப் பின்னர், பயிற்றுவிப்பு குழாமை நீக்குமாறு விளையாட்டு அமைச்சரினால் கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஏற்கனவே குறித்த உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும், தற்போது இடம்பெறவுள்ள நியூசிலாந்துடனான போட்டி நிறைவடையும் வரை தற்போதுள்ள பயிற்றுவிப்பு அதிகாரிகள் குழுவை பேணுவதற்கான அனுமதியை வழங்குமாறு கோரியிருந்தனர்.

ஆயினும் தற்போது பிரதான பயிசியாளரான ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளதுடன், அவரது இடத்திற்கு பதில் தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ஜெரோமி ஜயரத்ன  நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...