அம்பாள்குளம் இளைஞனின் தகவலுக்கமைய 2 கிளேமோர் குண்டுகள் மீட்பு | தினகரன்


அம்பாள்குளம் இளைஞனின் தகவலுக்கமைய 2 கிளேமோர் குண்டுகள் மீட்பு

அம்பாள்குளம் இளைஞனின் தகவலுக்கமைய 2 கிளேமோர் குண்டுகள் மீட்பு-2 Claymore Recovered Kondavil Jaffna
கடந்த சனிக்கிழமை (12) கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்..

திருகோணமலை, சேருநுவர பகுதியில் கைதான கிளிநொச்சி, அம்பாள்குள இளைஞனிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து யாழ். கோண்டாவில், வரணி பகுதியில் 15 கிலோகிராம் எடை கொண்ட இரண்டு கிளேமோர் குண்டுகள்  மீட்கப்பட்டுள்ளன.

திருகோணமலை, சேருநுவர பிரதேச்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த ஜோசப் பீட்டர் எனும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி என தெரிவிக்கப்படும் குறித்த இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை (11) ரி56 வகை துப்பாக்கி ஒன்றுடன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சனிக்கிழமை (12) அவரது அம்பாள்குளம் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் கைக்குண்டுகள், தோட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டதோடு, அவ்வீட்டிலிருந்த அவரது மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, இவர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்போது குறித்த நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கோண்டாவில், வரணி பிரதேசத்திலுள்ள காணியின் பிற்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு இரு கிளேமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சம்பவம் தொடா்பில் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...