தலைமன்னாரில் 227 கிலோ கடலட்டை மீட்பு | தினகரன்


தலைமன்னாரில் 227 கிலோ கடலட்டை மீட்பு

தலைமன்னார், பியர் கிராம் கடற்கரையில் வைத்து 227கிலோ கிராம் கடலட்டையை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேற்படி  கடற்படையினரால் தலைமன்னார், பியர்கிராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கைகளின்போது கடற்கரையில் கைவிடப்பட்டிருந்த டிங்கி படகொன்றை பரிசோதித்தபோது அப்படகிலிருந்து 06பைகளில் பொதியிடப்பட்ட கடலட்டைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கு வெளியே காணப்பட்ட தகன இயந்திரம், மீன்பிடிவலை என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கடலட்டைகள் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் கடற்படையினர்,  கடற்படையினரின் நடவடிக்கை காரணமாக இவ்வாறு  கைவிட்டுச் சென்றிருக்கலாமென சந்தேகிக்கின்றனர்.  

கைப்பற்றப்பட்ட மீன்பிடி பொருட்கள் விசாரணை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், சுங்க காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

மேலும்  கடற்படை கட்டளை பிரிவினரால் அன்று காலை மன்னார், சவுத் பார் கடற்கரையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 55 கடலட்டைகளுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் இலங்கைக்கு சொந்தமான சமுத்திர வலயம், கடற்கரை என்பவற்றை கேந்திரமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் காரணமாக இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் கட்டுப்படுத்த கூடியதாக உள்ளதுடன்  இது தொடர்பில் கடற்படையினர் மிகுந்த கவனம் செலுத்தியும் வருகின்றனர்.


Add new comment

Or log in with...