Tuesday, April 23, 2024
Home » சமூக அறிவியல் ஆய்வகம் மலையகத்தில் உதயம்

சமூக அறிவியல் ஆய்வகம் மலையகத்தில் உதயம்

by damith
February 13, 2024 5:55 am 0 comment

மலையக சமூக அறிவியல் ஆய்வகம் எனும் அமைப்பு எழுத்தாளரும், ஆய்வளருமான மதுசூதனன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டி டெவோன் ரெஸ்டூரன்ட் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எழுத்தாளரும், ஆய்வாளருமான ரா. நித்தியானந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனையடுத்து மலையக பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு பரப்புக்கள் ஆராயப்பட்டன. இந்நிகழ்வில் ஆய்வாளர்களான பேராதனைப்பல்கலைக்கழக பிரதான நூலகர் ஆர். மகேஸ்வரன், கணக்காய்வு ஆலோசகர் யோகேஸ்வரன், க. பூங்கோதை, சதிஸ்கி ருஸ்ண பிள்ளை மற்றும் மலையக கலை, கலாசார, சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன், கண்டி விவேகானந்தாக்கல்லூரி அதிபர் எஸ். சிவஞான சுந்தரம், இரா.அ.இராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வமைப்பின் இணைப்பாளர்களாக ரா. நித்தியானந்தன், மதுசூதனன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிகழ்வை இரா.அ. இராமன் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT