Friday, March 29, 2024
Home » யோகா கலையை முறைப்படி கற்பிக்கும் பணியில் பேராசிரியை திருமதி கோமதி

யோகா கலையை முறைப்படி கற்பிக்கும் பணியில் பேராசிரியை திருமதி கோமதி

by damith
February 13, 2024 10:15 am 0 comment

யோகா என்னும் உயிர்காக்கும் கலையை, உடல் பேணும் முறையை- தன் தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வயதில் இருந்தே 15 ஆண்டுகளுக்கு மேலாக அவரது குருவும் தாத்தாவுமான ஆசனா ஆண்டியப்பன் அவர்களிடம் குருகுலமுறையில் உடன் இருந்து சேவைகள் செய்து முறையாகத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தவர் யோகா நிபுணர், யோகா பயிற்சிஇயக்குநர், யோகா பேராசிரியை திருமதி உ.கோமதி Msc,MPhil, PhD, Msc-_yoga ஆவார்.

இவர்15 ஆண்டுகளுக்கு மேலாக- ‘கோமதிஆசனா ஆண்டியப்பன்யோகா, இயற்கை வாழ்வியல் ஆராய்ச்சி, கல்வி அறக்கட்டளை’- என்ற பெயரில் தமிழ்நாட்டின் சென்னையில் நடத்திவரும் பயிற்சி மையத்தில் பல ஆண்களும் பெண்களும் கற்றுத்தேர்ந்து- மற்றவர்களுக்கு இக்கலையைப் பயிற்றுவிக்கும் அளவுக்கு உருவாகியிருக்கிறார்கள்.

உலகளாவிய ஒப்பற்ற உயர்வான யோகா எனும் உன்னதக்கலையை- தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு நோய்ப்பிணி நீங்குமாறு உற்சாகப்படுத்தி வாழ்வியல் கலைகளோடு தனித்துவம் மிளிர சிறப்பாகக் கற்றுக்கொடுக்கும் பாங்கு- எல்லா வயதினருக்கும் ஏற்றதாகவும் எளிதாக கற்றுக்கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது.

பலருக்கும்- இவர் சிறப்பு வகுப்புகள் எடுக்கிறார். திருமூலர், பதஞ்சலி போன்ற பலமகான்களின் சித்தர்களின் அடியொற்றி ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் உடன்சூழ உள்ளம் தெளிவு பெறவும், உடல்நலம் பெறவும், எண்ணங்களும் செயல்களும் இனிமையும் பெருமையும் ஆழமாகப்பெறும் வகையில் தான் கற்ற யோகா மற்றும் தியானக்கலையை அடிப்படைத் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், பாமரர் என்ற பாகுபாடு இன்றி ஒட்டுமொத்த மனிதசமுதாயத்திற்கான ஒருசேவையாகச் செய்து வருகிறார் அவர்.

திருமதி கோமதி அவர்கள் உண்மையான பல ஆன்மிகப் பணிகளிலும் மக்கள் துயர் போக்கும் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். கல்விப்பணி, எழுத்து,கலை, இலக்கியம், சித்தர்கள் ஆராய்ச்சி போன்ற பல்துறை வித்தகராகவும் திகழும் திருமதி கோமதி, தங்கள் அறக்கட்டளை மூலம் மக்களுக்கான பல அரிய சேவைகளையும் ஆலயத்தொண்டுகளையும் செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT