கடும் மழை; காற்று; பாரிய மின்னல் எச்சரிக்கை! | தினகரன்


கடும் மழை; காற்று; பாரிய மின்னல் எச்சரிக்கை!

கடும் மழை; காற்று; பாரிய மின்னல் எச்சரிக்கை!-Weather Heavy Rain Thunder Shower-Warining

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக, நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்போது நிலவும் மழை நிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் விசேடமாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடனான மழையின் போது பாரிய மின்னல் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும், மணிக்கு 70 - 80 கிலோ மீற்றர் வேகத்தில் தற்காலிகமாக காற்றின் வேகம் அதிரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா, தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்போது, ஏற்படக்கூடிய விபரீதங்கள்,

  • தற்காலிக வீடுகளுக்கு ஓரளவான பாதிப்பு ஏற்படலாம் எனவும், மேற் கூரை மற்றும் உறுதியாக பொருத்தப்படாத தகடுகள் காற்றில் அடித்துச் செல்லப்படலாம்.
  • மரங்களின் கிளைகள் உடைதல், வீதியோரங்களிலுள்ள பாரிய மரங்கள் வீழ்தல் என்பன இடம்பெறலாம்.

மின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

  • வெட்டவெளியில் அல்லது மரத்தின் கீழ்  நிற்க வேண்டாம். பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது  மூடிய நிலையில் உள்ள வாகனங்களில் இருக்கவும்.
  • வயல்கள் தோட்டங்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும்  நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் இருப்பதைத் தவிருங்கள்.
  • கம்பி இணைப்புடனான தொலைபேசிகள் மற்றும் மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்ட மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம்.
  • துவிச்சக்கர வண்டி, உழவு இயந்திரம், படகு போன்ற திறந்த நிலையில் உள்ள வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்.
  • கடும் காற்றின் காரணமாக, மரங்கள் மற்றும் மின் கம்பிகள் அறுந்து வீழ்வதற்கு வாய்ப்புக் காணப்படுவதால் அது தொடர்பில் அவதானமாக இருங்கள்.
  • அவசர நிலையின் போது, குறித்த பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரியின் உதவியை நாடுங்கள் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில்
கிழக்கு மற்றும் வடக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...