Thursday, April 18, 2024
Home » ரினோன், சிட்டி, விக்டரி அணிகள் இலகு வெற்றி

ரினோன், சிட்டி, விக்டரி அணிகள் இலகு வெற்றி

by damith
February 13, 2024 10:00 am 0 comment

19 வயதுக்கு உட்பட்ட யூசுப் கிண்ண கால்பந்து தொடரின் ஆரம்ப போட்டிகளில் ரினோன், கொழும்பு சிட்டி மற்றும் விக்டரி கால்பந்து அணிகள் வெற்றியீட்டியதோடு சோண்டர்ஸ் மற்றும் பிளக்ஸ்வெயார் அணிகளுக்கு இடையிலான போட்டி 1–1 என்ற கோல்களால் சமநிலை பெற்றது.

கொழும்பு சிட்டி கால்பந்து மைதானத்தில் வார இறுதியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் ரினோன் அணி 3–0 என்ற கோல்களால் கொள்ளுப்பிட்டி யுனைடட் அணியை வீழ்த்தியதோடு கொழும்பு சிட்டி அணி, யங் சில்வர் அணியை 3–0 என்ற கோல்களால் தோற்கடித்தது. இதில் மொரகஸ்முல்ல அணியை எதிர்கொண்ட விக்டரி அணி 1–0 என்ற கோல் கணக்கில் வென்றது.

16 அணிகள் பங்கேற்றிருக்கும் இந்தத் தொடரில் கடந்த இரு முறைகளும் சம்பியன் கிண்ணத்தை வென்ற ஜாவாலேன் அணி அடுத்த வாரம் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ் குணசேகர

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT