வியாழேந்திரன் எம்.பி. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு | தினகரன்

வியாழேந்திரன் எம்.பி. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு

வியாழேந்திரன் எம்.பி. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு-S Viyalendran Pledges to Support SLPP

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் (TNA) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமன (SLPP) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட பங்களிப்பு காரணமாக தான் இந்த முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (13) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தமது ஆதரவை கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...