நாட்டுப்பற்று பேசும் அமெரிக்கரை விட மகேஷ் சேனாநாயக்க மேல் | தினகரன்


நாட்டுப்பற்று பேசும் அமெரிக்கரை விட மகேஷ் சேனாநாயக்க மேல்

நாட்டுப்பற்று பற்றி பேசும் அமெரிக்கரை விட  மகேஷ் சேனநாயக்க எவ்வளவோ மேல் என பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர கூறியுள்ளார். ‘ரணவிருகாயா’ என்ற தனது கருத்தானது இராணுவத்தினரை தனது சொந்த அரசியல் இலாபத்துக்காக உபயோகப்படுத்தும் நபர்களை குறிக்கும். ஆனால் ஊடகங்கள் எனது குறிப்புகளை திரிபுபடுத்தியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த இருவரில் ஒருவரான பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர, அண்மையில்  வழங்கிய பேட்டியில் அவரது கருத்துக்கள் ஊடகங்களால் திரிபுபடுத்தப்பட்டது பற்றி குறிப்பிட்டார்.  

ரணவீரவோ அல்லது இராணுவத்தினர் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்பவர்கள் இராணுவத்தினருக்கு உரிய மரியாதையை அல்லது கௌரவத்தை முறையாக வழங்கத் தவறியவர்கள் ஆவர்.  

சரத் பொன்சேகா போன்ற யுத்த ஹீரோக்களை இழுத்துச் சென்று சிறையில் தன்ளியவர்களுக்கு ‘ரண வீருகாய’ வினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தான் இராணுவத்தினரை கால்வாய்களை சுத்தம் செய்யுமாறும், புற்களை வெட்டுமாறும், குப்பைகளை சேகரிக்குமாறும் மற்றும் அதுபோன்ற வேலைகளைச் செய்யுமாறும் கூறி வந்தனர் என்று பேராசிரியர் தேனுவர கூறுகிறார்.  

யுத்த களத்தில் சாதிக்காதவர்கள், ஏ. சி. அறைகளில் இருந்துகொண்டு கொழும்பில் உள்ள தமது அலுவலக நாற்காலிகளை சூடாக்கிக்கொண்டு உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தவர்களை யுத்த ஹீரோக்கள் என்று கூறமுடியாது. மிக் விமானக் கொள்வனவு விடயத்தில் மோசடி செய்தவர்களை யுத்த ஹீரோக்கள் என்று கூறமுடியாது. சரத் பொன்சேகா மற்றும் ஏனைய வீரர்கள தமது உயிர்களையும், அவயவங்களையும் தியாகம் செய்து உண்மையான யுத்த ஹீரோக்களாக்கியவர்கள், யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடவில்லை என்று சந்ரகுப்த தேனுவர   குறிப்பிடுகிறார்.


Add new comment

Or log in with...