Wednesday, April 24, 2024
Home » ஒருநாளில் நீக்கப்பட்ட தசுன் ஷானக்க இலங்கையின் ரி20 குழாமில் நீடிப்பு

ஒருநாளில் நீக்கப்பட்ட தசுன் ஷானக்க இலங்கையின் ரி20 குழாமில் நீடிப்பு

by damith
February 13, 2024 6:00 am 0 comment

இலங்கை ஒருநாள் குழாத்தில் இடம் கிடைக்காத முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ரி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தற்போது ஒருநாள் தொடரில் ஆடிவரும் இலங்கை அணி அடுத்து மூன்று போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரில் ஆடவுள்ளது. இதற்கான உத்தேச அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தசுன் ஷானக்க மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். அண்மைக் காலமாக சோபிக்கத் தவறிவரும் தசுன், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன அழைக்கப்பட்டார்.

இலங்கை மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 155 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 2–0 என கைப்பற்றிய நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை (14) அதே பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மோதும் ரி20 தொடர் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன் இரண்டு மற்றும் மூன்றாவது போட்டிகள் பெப்ரவரி 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அனைத்து போட்டிகளும் தம்புள்ளையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்காக நேற்று (12) அறிவிக்கப்பட்ட வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை குழாத்தில் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர இணைக்கப்பட்டிருந்தபோதும் தற்போதை உபாதைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் அவருக்கு பதில் பினுர பெர்னாண்டோ அழைக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின்போது காலில் உபாதைக்கு உள்ளான துஷ்மன்த சமீர ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் அசித்த பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்: வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), பத்தும் நிசங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, அஞ்சலோ மத்தியூஸ், தசுன் ஷானக்க, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, மதீஷ பதிரண, டில்ஷான் மதுஷங்க, நுவன் துஷார, அக்கில தனஞ்சய, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT