ஐக்கிய இராஜ்ஜியத்தின் பெருமைக்குரிய Cfi.co விருது வென்ற eChannelling | தினகரன்


ஐக்கிய இராஜ்ஜியத்தின் பெருமைக்குரிய Cfi.co விருது வென்ற eChannelling

சுகாதார பராமரிப்பு சேவைகளை டிஜிட்டல் மயத்தினூடாக பெற்றுக் கொடுக்கும் eChannelling செயற்பாடுகளை கெளரவித்து, ஐக்கிய இராஜ்ஜியத்தின் கெப்பிட்டல் ஃபினான்ஸ் இன்டர்நஷனல் நிறுவனத்தினால் பெருமைக்குரிய Cfi.co விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. 

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இலங்கையின் சுகாதார பராமரிப்புத் துறையில் வழங்கி வரும் சேவைகளை கெளரவித்தும், வைத்தியசாலைகள், நோயாளர்கள் மற்றும் வைத்தியர்கள் இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையில் சேவைகளை பெற்றுக் கொடுப்பதை கெளரவிக்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகள், சேவைகள் போன்றவற்றின் செயற்திறனை இந்த சேவை மேலும் மேம்படுத்தியுள்ளதுடன், வைத்திய பதிவொன்றை மேற்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்து, செளகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விருதைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில், eChannelling பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளின் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், இந்த விருதை பெற்றுக் கொண்டமை தொடர்பில், நாம் மிகவும் பெருமையடைகின்றோம். எமது அணியினரின் முயற்சிகள், கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு போன்றன சர்வதேச மட்டத்தில் இந்த விருதினூடாக கெளரவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இலங்கையருக்கும் வைத்திய முற்பதிவு, வீடியோ ஆலோசனை பெறல், மருந்துப் பொருட்கள் விநியோகம் மற்றும் பல சேவைகள் அடங்கலாக சிறந்த சுகாதார சேவைகளை டிஜிட்டல் முறையினுௗடாக பெற்றுக் கொள்ளக்கூடிய நோக்கில் நாம் eChannelling சேவையை அறிமுகம் செய்தோம். இதனூடாக, பொது மக்களுக்கும் சேவை வழங்குநர்களுக்குமிடையிலான இடைவெளியை தொழில்நுட்பத்தினுௗடாக நிவர்த்தி செய்து, பாவனையாளருக்கு நட்பான வகையில் வினைத்திறன் மற்றும் செயற்திறனை மேம்படுத்தி, இலங்கையில் சுகாதாரபராமரிப்பு சேவை வழங்கலில் நாம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். eChannelling கட்டமைப்புடன் இணைந்துள்ள பெருமளவு சுகாதார பராமரிப்பு பங்காளர்களினுௗடாக, இந்த கட்டமைப்பின் வெற்றிகரமான செயற்பாடு புலப்படுவதுடன், நாடு முழுவதிலும் வசிக்கும் சுமார் மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு, வெளிநாடுகளில் வசிப்போருக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் சேவைகளை பெற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. என்றார்.  


Add new comment

Or log in with...