உயிர்காக்கும் Zipline | தினகரன்


உயிர்காக்கும் Zipline

உயிர்காக்கும் Zipline-Drone Delivering Health Supplies

இலங்கை மற்றும் உலகெங்கிலும் முக்கிய சுகாதாரப் பொருட்களை பெற்றுக்கொள்கின்றமை பெரும் சிக்கல் மிக்கதாக உள்ளமைக்கு தூரம் முக்கிய காரணியாக உள்ளது. மத்திய சேமிப்பகத்திலிருந்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதார வசதிகளின் தேவைக்கு மருந்துகளை விநியோகம் செய்ய வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக  அண்மைய ஆண்டுகளில் இலங்கை வெள்ளம், நிலச் சரிவுகள் மற்றும் பல துரதிர்ஷ்டவசமான பேரழிவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமையால் இலங்கையில் உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினையாக இது உள்ளது.

உயிர்காக்கும் Zipline-Drone Delivering Health Supplies

இப்பிராந்தியத்தில் சிறந்த சுகாதார பராமரிப்பு துறையை இலங்கை கொண்டுள்ள போதிலும், பாரம்பரிய வாகனங்கள் ஊடான விநியோக சங்கிலி முகாமைத்துவத்தை துரிதப்படுத்த வேண்டிய தேவையுள்ளமையை சுகாதாரத்துறை சார் நிபுணர்கள் இணங்கண்டுள்ளனர். அனைத்து பிரஜைகளுக்கும் அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் முக்கியமான சுகாதார சேவையை விரைவாக வழங்க வேண்டிய அவசியம் உள்ளதாக, மருத்துவர் நவீன் உடவெல்ல தெரிவிக்கின்றார்.

Zipline அறிமுகப்படுத்தியுள்ள உயிர் காக்கும் மருத்துவ ட்ரோன் விநியோக சேவையின் மூலம், நேரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருக்கும்போது தடுப்பூசிகள், இரத்தம் மற்றும் பிற உயிர் காக்கும் பொருட்களை உடனடியாக விநியோகம் செய்ய முடியும். இது பேரழிவு சூழ்நிலையின் போது அதனால் பாதிக்கப்படும் மில்லியன் கணக்கான மக்கள் விரைவாக சுகாதார சேவையை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த உதவும்.

உயிர்காக்கும் Zipline-Drone Delivering Health Supplies

உலகளாவிய ரீதியில், இந்தியாவின் மகாராஷ்டிராவுக்கு மேலதிகமாக, Zipline கானா மற்றும் ருவாண்டாவின் அரசாங்கங்களுடன் பங்காளராக இணைந்துள்ளது, அங்கு அவை அடுத்த பல ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 700 மில்லியன் மக்களுக்கு சேவை செய்வதே ஜிப்லைனின் குறிக்கோளாகும்.


Add new comment

Or log in with...