படைப்பாற்றலை மீள்வரையறை செய்யவுள்ள OPPO Reno 2f | தினகரன்


படைப்பாற்றலை மீள்வரையறை செய்யவுள்ள OPPO Reno 2f

படைப்பாற்றலை மீள்வரையறை செய்யவுள்ள OPPO Reno 2f-Photography Powerhouse OPPO Reno2f set to Redefine Creativity in Sri Lanka Sri Lanka

பயனர்களின் படைப்பாற்றலின் வரம்புகளை மீள்வரையறை செய்வதாக உறுதியளித்துள்ள OPPO, தனது RENO 2f (ரெனோ 2f) மொபைல் போனை இம்மாதம் இலங்கை சந்தையில் வெளியிடவுள்ளது. RENO 2f ஆனது 48MP குவாட் கெமரா தொகுதி, மனித கண்களுக்கு கூட அறிய முடியாத விபரங்களை எடுக்கும் மிகத் தெளிவான இரவு காட்சிகளை பெறும் வகையிலான அல்ட்ரா டார்க் (Ultra Dark) வசதி உள்ளிட்ட புகைப்படங்களை மேம்படுத்தும் அம்சங்களையும், விதிவிலக்கான மிகத் தெளிவான மற்றும் எவ்வித அதிர்வலைகளும் இன்றிய 'அக்ஷன் கெமரா' (action camera) போன்ற வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டு வரவுள்ளது.

ரெனோ என்பது எவ்வாறானது?
OPPO ரெனோவின் பிறப்பு, 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், முதலாவது ரெனோ தொடரின் வெளியீட்டை அடுத்து இடம்பெற்றது. இது இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், தமக்குள் இருக்கும் துடிப்பைப் பகிரவும் விரும்புகின்ற இளைஞர்களுக்காகவென, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட OPPO ரெனோ சீரிஸ் அதன் ஸ்டைலான தோற்றம் மற்றும் புதுமையான வடிவமைப்பு காரணமாக, அதன் பயனர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு பயனருக்கும் அவரவருக்கு ஏற்றவகையிலான வித்தியாசமானதாக ரெனோ அமைவதாக OPPO நம்புகிறது. அதாவது, அசல் OPPO ரெனோ சீரிஸானது, பயனர்கள் விரும்பியவாறு செலுத்தும் சுதந்திரமான கடிவாளத்தைக் வழங்கி, படைப்பாற்றலுக்கான தடைகளை தகர்த்து அவர்களுக்கு அதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது. ரெனோ வரையறைகளை மீறி, ஒவ்வொரு பயனரும் அவர்களுக்கான தனித்துவமான ரெனோ அனுபவத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றது. ரெனோவின் திறனைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், OPPO ஆனது உலகெங்கிலும் உள்ள கலைஞர்களுடன் இணைந்து ரெனோ நெறிமுறைகளை இயக்குகின்ற, விளையாட்டு, கற்பனை உணர்வு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. எதிர்வரும் பத்து ஆண்டுகளில் OPPO இன் ஸ்மார்ட்போன் மற்றும் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கான ஊக்கியாக ரெனோ சீரிஸ் அமையும் எனும் நோக்கிலேயே அது வெளியிடப்பட்டது. விரைவில் வெளியிடப்படவுள்ள OPPO ரெனோ 2 சீரிஸ் இந்த படைப்பாற்றலை ஒரு படி மேலே கொண்டு செல்லும். பயனர்களுக்கு சவாலாக அமைந்துள்ள எப்போதும் போன்ற புகைப்படம் எடுத்தல் நுட்பங்களை புறந்தள்ளி, புதிய சிந்தனையைத் தூண்டி, கெமரா பயன்பாடுகளுக்கு துணை நிற்கும்.

முன்னணி தொழில்நுட்பத்துடன் பயனர்களின் படைப்பாற்றலை வெளியிடும்
OPPO என்பது மொபைல்போன் புகைப்படப்பிடிப்பு எல்லைகளைத் தகர்த்து, சாதனத்தின் புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்களுக்குள் எப்போதும் போன்ற கண்ணோட்டங்களை நீக்கி, புதிய கோணங்களுக்கும், சாத்தியங்களுக்கும் அவர்களது எண்ணங்களை நோக்கி கொண்டு செல்லும் என்பதோடு, பரந்த பிரதேசங்கள் முதல் நெரிசலான நகர வீதிகள் வரை அல்லது பிரகாசிக்கும் கடற்கரை முதல் இருண்ட நிலவில்லாத இரவுகள் வரை, அது இடம் அல்லது நேரம் போன்ற காரணங்களால் தடைகளுக்குட்படாது.

படைப்பாற்றலை மீள்வரையறை செய்யவுள்ள OPPO Reno 2f-Photography Powerhouse OPPO Reno2f set to Redefine Creativity in Sri Lanka Sri LankaOPPO வெறுமனே படைப்பாற்றல் கொண்ட முடிவில் கவனம் செலுத்துவதோடு நின்றுவிடாமல், செயலாற்றலையும் நம்புகிறது. இச்செயற்பாட்டை மதிப்பிடுவதும் அனுபவிப்பதும் பயனர்களின் படைப்பாற்றலை முன்னரை விட அதிகமாகக் வெளிப்படுத்தலாம். ஆகையால், OPPO ஒரு குவாட் கெமராவை உருவாக்கியுள்ளது, இது எல்லா கோணங்களிலிருந்தும் வித்தியாசமாகப் பார்ப்பதற்கான சக்திவாய்ந்த கருவியாக அமைகிறது. இது பயனர்கள் தமது பயணத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் மறக்கமுடியாத தருணங்களை பதிவுசெய்வதற்கு வழியமைக்கிறது.

ரெனோ 2f அல்ட்ரா டார்க் வசதியானது (Ultra Dark Mode), பிரகாசமான நகரங்கள் முதல் மங்கலான கிராமத்தின் இரவுகள் உள்ளிட்ட பல்வேறு இரவு காட்சிகளினதும் பூரணமாக உள்ளடக்குகின்றது. ஒளியின் அளவு 1 லக்ஸிற்கு (1 lux) இற்கு கீழ் காணப்பட்டாலும், ஹார்ட்வெயார் - நெட்வொர்க் இசைவாக்கத்துடனான AI (செயற்கை நுண்ணறிவு) மூலமாக  இடையீடுகளை குறைப்பதன் மூலம், புகைப்படங்களை வெறும் கண்ணில் புலப்படும் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட தோற்றத்தை வழங்கும். இதேவேளை, மென்பொருள் மாற்ற வெளிப்பாட்டு சீராக்கம் (software dynamic exposure adjustments) உரிய பட பிரகாசத்தையும், இரவில் பொருட்களை வெளிப்படுத்துகையையும் உறுதிப்படுத்துகின்றது. உட்கட்டமைப்பில் நிறுவப்பட்டுள்ள NPU ஆனது, பட உருவாக்க செயலாக்கத்தை விரைவுபடுத்தி, மிக வசதியாகவும் எளிதாகவும் அழகான இரவுகளை அனுபவிக்க உதவுகிறது.

இனியென்ன வேண்டும், OPPO வின் தொழிற்துறை முன்னணியைக் கொண்ட ஹைப்ரிட் பட உறுதிப்படுத்தல் தொழில்நுட்பத்திற்கு நன்றி. ரெனோ 2f அல்ட்ரா ஸ்டெடி வீடியோ வசதியானது, மிகத் தெளிவானதும் அதிர்வுகளின்றிய வீடியோவை வெளிக் கொண்டுவர வழிவகுக்கின்றது. தரத்தின் மட்டத்தை நோக்காகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அக்‌ஷன் கெமராவின் அணுகலானது, பயனர்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளை - நடைபயிற்சி, பனிச்சறுக்கு, சைக்கிள் ஓட்டுதல் அல்லது பயணம் செய்தல் எனும் வேறுபாடுகளின்றி, ரெனோ 2f ஆனது, எப்போதும் நகர்ந்து கொண்டிருக்கும் பயனர்களுக்கு ஏற்றதாக அமைகின்றது.

OPPO பற்றி
வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை,  மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.
2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.
200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...