Friday, March 29, 2024
Home » U19 WC Final; இந்தியாவை வீழ்த்திய ஆஸி

U19 WC Final; இந்தியாவை வீழ்த்திய ஆஸி

- 14 வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய சாம்பியன் கனவு

by Prashahini
February 12, 2024 10:14 am 0 comment

நடப்பு இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி 14 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அவுஸ்திரேலியா.

கடைசியாக கடந்த 2010-ல் இளையோர் உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்றிருந்தது அவுஸ்திரேலிய அணி.

தென் ஆபிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. மொத்தம் 41 போட்டிகள். இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்டது. இந்த தொடரில் இந்திய அணி குரூப்-ஏ மற்றும் சூப்பர் சிக்ஸ் பிரிவில் குரூப் 1இலும் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் தென் ஆபிரிக்க அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.

குரூப்-சி மற்றும் சூப்பர் சிக்ஸ் பிரிவில் குரூப் 2இலும் விளையாடிய அவுஸ்திரேலிய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 253 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணிக்காக ஹாரி 42 ஓட்டங்கள், ஹக் வெய்ப்ஜென் 48 ஓட்டங்கள், ஹர்ஜாஸ் சிங் 55 ஓட்டங்கள், ஆலிவர் பீக் 46 ஓட்டங்கள் எடுத்திருந்தனர்.

254 ஓட்டங்கள், எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. 91 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆதர்ஷ் சிங் 47 ஓட்டங்கள், மற்றும் முருகன் அபிஷேக் 42 ஓட்டங்கள், எடுத்து ஆறுதல் தந்தனர். 43.5 ஓவர்களில் 174 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மஹ்லி, ராஃப் மேக்மில்லன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT