Friday, March 29, 2024
Home » கிழக்கு, ஊவா பகுதிகளில் பல தடவை மழைக்கு சாத்தியம்

கிழக்கு, ஊவா பகுதிகளில் பல தடவை மழைக்கு சாத்தியம்

- மேலும் சில இடங்களில் பிற்பகலில் மழை

by Rizwan Segu Mohideen
February 12, 2024 7:47 am 0 comment

– சில பகுதிகளில் 30-40 கி.மீ. வேகத்தில் காற்று

இன்றையதினம் (12) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT