Wednesday, April 24, 2024
Home » 42 ஆவது ஆண்டு விழா 14 ஆம் திகதி ஏற்பாடு
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்

42 ஆவது ஆண்டு விழா 14 ஆம் திகதி ஏற்பாடு

by damith
February 12, 2024 10:00 am 0 comment

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 42 ஆவது வருட நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி நள்ளிரவு பௌத்த மத பிரித் நிகழ்வுடன் ஆரம்பமாகி 15 ஆம் திகதி 42ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்படும்.

நிகழ்வின்போது லேக் ஹவுஸ் நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தமொன்றும் லேக்ஹவுஸ் அதிகாரிகளுடன் கைச்சாத்திடப்படும். அத்துடன் இலங்கை ரூபவாஹினி, நேத்ரா, ஐ சனல் ஆகிய மூன்று அலைவரிசையிலும் இணையதளம் ஊடாக வானொலி நேரடி ஒலிபரப்பு ஒன்றும் ஆரம்பிக்கப்படுமென இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தபானத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். ரூபவாஹினி 42ஆவது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார். இம் மாநாட்டின்போது கபில தசநாயக்க (பிரதிப் பணிப்பாளர்), சதிஸ் நீலகண்டன் (சந்தைப்படுத்தல் முகாமையாளரும்) கலந்து கொண்டனர். இங்கு மேலும் கூட்டுத்தபாணத்தின் தலைவர் தகவல் தருகையில்,

சிறிய விளம்பரங்கள் தொலைக்காட்சியில் நிகழ்சிகளின் போது கீழ் தளத்தில் எழுத்துவடிவில் அல்லது படத்துடன் விளம்பரங்களை காட்சிப்படுத்த விரும்பினால் அதற்கான விளம்பரங்களையும் லேக் ஹவுஸ் நிறுவனம் அதற்கான கட்டணத்தை அறவிட்டு ருபாவாஹினிக்கு அனுப்பினால் அவைகள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் போது விளம்பரப்படுத்தக் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் சகல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இணைய வானொலியூடாகவும் ஒலிபரப்படும். நேத்ரா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், கொழும்பில் நடைபெறும் இசை கலை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்படும். அதற்கான அனுசரணைகளைப் பெற்றுள்ளன. அத்துடன் எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்குச் சென்று அங்கு சில நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நோன்பு காலத்தில் நோன்பு நிகழ்வுகளையும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் ஒளிபரப்பப்படும்.

தெஹிவளை, கல்கிஸ்ஸ விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT