கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேருக்கும் வி.மறியல் நீடிப்பு | தினகரன்


கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேருக்கும் வி.மறியல் நீடிப்பு

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேருக்கும் வி.மறியல் நீடிப்பு-6 Suspects Further Remanded Including Kanjippanai Imran's Father, Brother

விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புட்ட குற்றவாளியான கஞ்சிப்பானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (09) குறித்த 6 சந்தேகநபர்களும் பேரும் காலி நீதவான் ஹர்ஷன கெகுனவெல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

அத்துடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவுக்கு கொண்டுவந்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ரத்கம பொலிஸாருக்கு நீதவான் இதன்போது உத்தரவிட்டமை குறிப்பிடத்தககது.

கைதிகள் தினமான கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சிறைத்தண்டனை கைதியான கஞ்சிபானை இம்ரானை, அவரது தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேர் பார்வையிட வந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் வழங்கிய சந்தேகத்திற்கிடமான உணவுப் பொதிகள் இரண்டை மீட்ட சிறைச்சாலை அதிகாரிகள், அதிலிருந்து 2 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 2 சார்ஜர்களைக் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த 6 பேரும் ரத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு உணவு கொள்கலன்களில் சூட்சுமமாக உருவாக்கப்பட்ட பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு மொபைல் போன்களும் அதற்கான இரு சார்ஜர்களும், 15 அங்குல வயர் ஒன்றும் அதில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.


Add new comment

Or log in with...