Home » இலங்கையில் இன்று முதல் UPI கட்டண முறை அறிமுகம்
பிரதமர் மோடி, ஜனாதிபதி ரணில் தலைமையில்

இலங்கையில் இன்று முதல் UPI கட்டண முறை அறிமுகம்

by damith
February 12, 2024 6:15 am 0 comment

இந்தியாவின் (UPI) Unified Payments Interface என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இன்று முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கையிலுள்ள இலங்கை தூதரகமும் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. Unified Payments Interface என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தினால் உடனடி பணம் செலுத்தும் முறைமையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல வங்கிக் கணக்குகளை, ஒரே கைபேசி செயலி, ஊடாக இணைக்கும் அமைப்பாகும், இந்த கட்டண முறை, கைபேசிகள் மூலம் வங்கிகளுக்கு இடையேயான மற்றும் தனிப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் மேம்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT