3rd T20; SLvPAK: மூன்றாவது போட்டியிலும் இலங்கை முதலில் துடுப்பாட்டம் | தினகரன்


3rd T20; SLvPAK: மூன்றாவது போட்டியிலும் இலங்கை முதலில் துடுப்பாட்டம்

3rd T20; SLvPAK: மூன்றாவது போட்டியிலும் இலங்கை முதலில் துடுப்பாட்டம்-3rd T20-SLvPAK-Toss SL Elected to Bat

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது இறுதியுமான ரி20 கிரிக்கெட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி விளையாடும் இறுதிப்போட்டி இதுவாகும்.

இரு அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் ஏனைய இரு போட்டிகளையும் வென்ற பாகிஸ்தான் அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரின் முதல் இரு போட்டிகளையும் வெற்றி பெற்ற இலங்கை அணி, பாகிஸ்தானுடனான இரு தரப்பு ரி20 போட்டித் தொடரை முதல் தடவை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் முடிவானது இரு அணிகளுக்கும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத போதிலும், 2009 இலங்கை கிரிக்கெட் அணியை குறிவைத்து இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் இடம்பெறுவது அரிதாகி விட்ட நிலையில் பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச போட்டி என்பதால் அந்நாட்டு ரசிகர்களுக்கு இத்தொடர் பெறுமதி வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இலங்கை அணியில் 5 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவிஷ்க பெனாண்டோ, மினோத் பானுக (வி.கா), இசுறு உதான, ஷெஹான் ஜயசூரியா, நுவன் பிரதீப் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களது இடத்திற்கு சதீர சமரவிக்ரம (வி.கா.), அஞ்சலோ பெரேரா, ஓஷத பெனாண்டோ, லஹிரு மதுஷங்க, லஹிரு குமார ஆகியோர் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி
தனுஷ்க குணதிலக, தசுன் ஷானக (தலைவர்), பானுக ராஜபக்ஷ, லக்‌ஷான் சந்தகன், வணிந்து ஹசரங்க, கசுன் ராஜித, சதீர சமரவிக்ரம (வி.கா.), அஞ்சலோ பெரேரா, ஓஷத பெனாண்டோ, லஹிரு மதுஷங்க, லஹிரு குமார

பாகிஸ்தான் அணியிலிருந்து கடந்த போட்டியில் விளையாடிய அஹமட் ஷெஷாட், உமர் அக்மல், மொஹமட் ஹஸ்னைன் ஆகியோர் நீக்கப்பட்டு, ஹரிஸ் சொஹைல், இப்திகார் அஹமட், உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணி
பகார் ஸமான், பாபர் அசாம், சர்பராஸ் அஹமட் (தலைவர், வி.கா.), ஹரிஸ் சொஹைல், இப்திகார் அஹமட், உஸ்மான் ஷின்வாரி, ஆசிப் அலி, இமாத் வசிம், வஹாப் றியாஸ், சதாப் கான், மொஹமட் அமீர்


Add new comment

Or log in with...