நியு ஸ்டார் கழகம் சம்பியன் | தினகரன்


நியு ஸ்டார் கழகம் சம்பியன்

அட்டாளைச்சேனை கோணாவத்தை கோல்டன் பெளண்டேசன் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது

அம்பாறை மாவட்டத்திலுள்ள 30 முன்னணிக் கழகங்கள் பங்கு கொண்ட

இச்சுற்றுப்போட்டி அணிக்கு 8பேர் 5ஓவர் கொண்டதாக நடைபெற்றது.

கோல்டன் பெளண்டேசன் செயலாளர் ஜே.அர்சாத் தலைமையில் அட்டாளைச்சேனைப் பொதுவிளையாட்டு மைதானத்தில்

நடைபெற்ற சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு அட்டாளைச்சேனை நியூஸ்டார் விளையாட்டுக் கழகமும்,அக்கரைப்பற்று ஏசீசீ கழகமும் தெரிவாகின.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸ்டார் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய ஏசீசீ அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 05 ஓவர் நிறைவில் 03 விக்கட்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றன. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுஸ்டார் அணியினர் 4.4 ஓவர்

நிறைவில் 4 விக்கட்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்களினால் இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர். சுற்றுப்போட்டியில் சிறந்த வீரராக ஏசீசீ அணியின் பெரோஸ் தெரிவு செய்யப்பட்டு 1500 ரூபா பணப்பரிசுடன் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இறுதிப்போட்டியில் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட நியு ஸ்டார் அணியின் வீரா் நௌசாத்துக்கு கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது இச்சுற்றுப்போட்டியில் சம்பியனான நியு ஸ்டார் கழகத் தலைவரிடம் வெற்றிக்கிண்ணத்துடன் 16ஆயிரம் ரூபா காசோலையினையும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்

சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் வழங்கி வைத்ததுடன், இரண்டாமிடம் பெற்ற ஏசீசீ அணியித் தலைவரிடம் கிண்ணத்துடன் ரூபா 11ஆயிரம் காசோலையினையும் அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ தலைவர் முகம்மட் றியாஸ் வழங்கி வைத்தார். நிகழ்வில் அட்டாளைச்சேனை அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளனத்தின் தலைவர் ஹம்ஸா சனூஸ், ஏ.எம்.முஸம்மில்,கோல்டன் பெளண்டேசன் தலைவர் முகம்மட் சப்ரி,நியுஸ்டார் கழகத்தின் செயலாளர் ஏ.எச்.அஸ்லம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...