காணாமல் போன கம்பளை ஆசிரியை சடலமாக மீட்பு | தினகரன்


காணாமல் போன கம்பளை ஆசிரியை சடலமாக மீட்பு

காணாமல் போன கம்பளை ஆசிரியை சடலமாக மீட்பு-Missing Teacher Body Found

மரணத்தில் உறவினர்களுக்கு சந்தேகம்

வேலை முடிந்து வீடு திரும்பவில்லையென, ஏழு நாட்களாக தேடப்பட்டு வந்த ஆசிரியை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கம்பளை, திறப்பனையில் வசிக்கும் திருமணமாகாத சந்திமா நிசங்சலா ரத்நாயக்க, எனும் 27 வயது ஹட்டன், ஶ்ரீ பாத வித்தியாலய ஆசிரியையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டிருந்தது.

கடந்த ஒக்டோபர் 01 ஆம் திகதி இவ்வாறு காணாமல் போனதாக தெரிவித்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இது தொடர்பில் கம்பளை நீதவான் நீதிமன்றத்திலும் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

காணாமல் போன கம்பளை ஆசிரியை சடலமாக மீட்பு-Missing Teacher Body Found

இதேவேளை, நேற்று முன்தினம் (07) இரவு 10.00 மணியளவில் தலாத்துஓயா ஹாரகம பகுதியில் மகாவலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் உடலொன்று குறித்து பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய தலாத்துஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளைத் ஆரம்பித்தனர்.

மகாவேலி ஆற்றில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தலாத்துஓயா பொலிசார் நேற்று (08) கண்டி நீதவான் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் தகவலளித்ததைத் தொடர்ந்து நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்கு நீதவான் உத்தரவிட்டார்.

காணாமல் போன கம்பளை ஆசிரியை சடலமாக மீட்பு-Missing Teacher Body Found

நீதவான் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், மரணமடைந்தவரின் தந்தை மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சடலம் தந்தையால் அடையாளம் காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த மரணம் சந்தேகத்திற்குரியது எனத் தெரிவித்து தந்தையினால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

சந்திமா நிசங்சலா காணாமல் போன தினத்தில் (01) அப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளதோடு, பெற்றோர் இரவு வரை அவரைத் தொடர்ந்து தேடியுள்ளனர், அதனைத் தொடர்ந்து அவர்கள் கம்பளை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணாமல் போன கம்பளை ஆசிரியை சடலமாக மீட்பு-Missing Teacher Body Found

ஸ்ரீ பாத வித்யாலயத்திலிருந்து 60 கி.மீ தூரம் வரை வந்த அவர், அவரது வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியை அவரது வீடு நோக்கி நடந்து செல்வதை வர்த்தக நிலையத்திலிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

இருப்பினும், மழை காரணமாக வீதியின் அருகே உள்ள வடிகானில் விழுந்திருக்கலாம் என, பிரதேசவாசிகளும் பொலிசாரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன கம்பளை ஆசிரியை சடலமாக மீட்பு-Missing Teacher Body Found

இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவமொன்றிற்கு முகம் கொடுத்ததாக அப்பிரதேச பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தெரிவித்த குறித்த பெண் மழை நாளொன்றில் உரிய முறையில் நிர்மாணிக்கப்படாத வடிகானில் மூடி இருப்பதாக காலை வைத்துள்ள குறித்த பெண் வடிகானில் வீழ்ந்து சுமார் 10 நிமிடங்கள் வரை போராடி அதிலிருந்து மீண்டு வந்ததாக தெரிவித்திருந்தார்.

ஆயினும், அவர் அவ்வாறு வடிகானில் விழுந்தால், உடல் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் கிடைக்க வாய்ப்பில்லை என்று ஆசிரியையின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், குறித்த மரணம் சந்தேகத்திற்குரியது என ஆசிரியரின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யுவதி, ஒரு சில மாதங்களில் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (09) இடம்பெறவுள்ளதோடு, சடலம் தற்போது கண்டி பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கம்பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...