மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பரிசீலனை | தினகரன்


மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பரிசீலனை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு சட்ட மா அதிபர் திணைக்களம் பரிசீலித்து வருகின்றது.

இவ்வாறு இலங்கை சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி,  சிரேஷ்டவழக்கறிஞர் நிஷாந்த ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இலங்கை தூதரகம் ஊடாக வெளிநாட்டு அமைச்சு அண்மையில் முறையாக அனுப்பி வைத்திருந்தது.


Add new comment

Or log in with...