யானைகளின் உயிரிழப்புக்கு விஷம் ஏறியமையே காரணம் | தினகரன்


யானைகளின் உயிரிழப்புக்கு விஷம் ஏறியமையே காரணம்

ஹபரண, ஹிரிவடுன்னவின்  தும்பிகுளம காட்டுப்பகுதியில் 06பெண் யானைகள் உள்ளிட்ட 07 யானைகளினதும் உடலில் விஷம் ஏறியதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்தினால் இது தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, அவர்கள் அளித்த அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக தெரியவந்துள்ளதாக, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.

இருப்பினும், யானைகளின்உடலில்எந்த வகையான விஷம் ஏறியது  என்பது தொடர்பில் தெரியவரவில்லை.

குறித்த விஷத்தின் வகையை அறிய இந்த அறிக்கைகளைஅரசபகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே யானைகளின் உடல் பாகங்கள் அரசபகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குஒப்படைக்கப்பட்டதோடு, அது தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...