பூஜித், ஹேமசிறிக்கு இம்மாதம் 23 வரை விளக்கமறியல் | தினகரன்

பூஜித், ஹேமசிறிக்கு இம்மாதம் 23 வரை விளக்கமறியல்

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ ஆகியோர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (09) முன்னெடுக்கப்பட்டபோது, கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட பிணை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றையதினம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...