ஶ்ரீ.ல.சு.க.வின் ஆதரவு கோட்டாவுக்கு; ஜனாதிபதி சுயாதீனம் | தினகரன்


ஶ்ரீ.ல.சு.க.வின் ஆதரவு கோட்டாவுக்கு; ஜனாதிபதி சுயாதீனம்

  • ஶ்ரீ.ல.சு.க. பதில் தலைவராக ரோஹண லக்ஷ்மன்
  • கட்சியின் எதிர்கால நடவடிக்கைக்கு 15பேர் கொண்ட அரசியற்குழு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாக செயற்படவுள்ளதன் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு 15 பேர் கொண்ட அரசியற்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இன்று அநுராதபுரத்தில் நடைபெறும் ஸ்ரீ.ல.பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி. துமிந்த திஸாநாயக்கவும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார  திஸாநாயக்கவும் கலந்து கொள்ளவுள்ளதாக சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சு.க. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவும்ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் எனஐ.ம.சு.கூ.பொதுச் செயலாளர் எம்.பி. மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

(படம்: கயான் புஷ்பிக)

 


Add new comment

Or log in with...