ஏப்.21 தாக்குதல்; பூஜித், ஹேமசிறியின் பிணை இரத்து | தினகரன்


ஏப்.21 தாக்குதல்; பூஜித், ஹேமசிறியின் பிணை இரத்து

மீண்டும் விளக்கமறியலில் 

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட பிணை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

கொழும்பு பிரதான நீதவானினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் மீளாய்வு விண்ணப்பம் தொடர்பில் இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி இவ்வுத்தரவை வழங்கியுள்ளார்.

அதற்கமைய கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெணான்டோஆகிய இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் இருவரும் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்கில்குறித்த இருவருக்கும் கொழும்பு பிரதான நீதவானினால் பிணை வழங்கப்பட்டிருந்த்து.

குறித்த இருவருக்கும் பிணை வழங்கியமை சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது எனவும் அதனை  மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி கடந்த ஜூலை 18 ஆம் திகதி சட்ட மா அதிபரினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஜூலை 02ஆம் திகதிகைதுசெய்யப்பட்டகுறித்த இருவரும்விளக்கமறியலில் வைக்கப்பட்டுகடந்த ஜூலை 09 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த வாரம் (03) இடம்பெற்ற இவ்வழக்கு விசாரணையில் CID யினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய சந்தேகநபர்கள் இருவரினதும் வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு நீதவான் லங்கா ஜயரத்னஉரிய நிறுனங்களுக்குஉத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...