மினுவங்கொடை கலவரம்; சேதமடைந்த கடைகள் மீள்திறப்பு | தினகரன்


மினுவங்கொடை கலவரம்; சேதமடைந்த கடைகள் மீள்திறப்பு

புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள மினுவாங்கொடை கடைத் தொகுதி மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலினால் ​நேற்று திறந்து வைக்கப்பட்டது. 

கடந்த மே மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டன மினுவாங்கொடை, பிரதான பஸ் தரிப்பிடத்தில் காணப்படும் கடைத் தொகுதி, புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இவ்வாறு வர்த்தகர்களிடம் கையளிக்கப்பட்டது. 

ஆளுநரின் வேண்டுகோளுக்கு அமைய, நன்கொடையாளர்களின் உதவியினால் குறித்த கடைத் தொகுதி முழுமையாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். 

முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 


Add new comment

Or log in with...