இராணுவ சோதனை சாவடியில் பொலிஸார் | தினகரன்


இராணுவ சோதனை சாவடியில் பொலிஸார்

மஹிந்த தேசப்பிரிய யோசனை

வடக்கு, கிழக்கில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட இராணுவச் சோதனைச்சாவடிகளில் பொலிஸாரையும் கடமையிலீடுபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பணிப்புரை விடுத்தார். 

இது தொடர்பான யோசனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படுமென்று கூறிய அவர், ஆ​ைணக்குழு இந்த யோசனையை அங்கீகரிக்கும் பட்சத்தில், ஒவ்வோர்  இராணுவச் சோதனைச் சாவடியிலும் பொலிஸாரையும் பணியில் அமர்த்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். 

பத்திரிகை ஆசிரியர்களை நேற்றுச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “புதிதாக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டால் அதில் பொலிஸாரையும் கடமையில் ஈடுபடுத்துவதே சாலச் சிறந்தது” என்றார். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் புதிதாக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பியபோதே தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

நமது நிருபர் 


Add new comment

Or log in with...