2nd T20; SLvPAK: இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் | தினகரன்


2nd T20; SLvPAK: இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

2nd T20; SLvPAK: இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்-2nd T20-SLvPAK-SL Won the Toss and Elected to Bat

பாகிஸ்தான் உடனான தொடரை முதல் தடவை வெல்லும் வாய்ப்பு

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அணியின் தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றால் தானும் அதே முடிவையே எடுக்கவிருந்ததாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட்டும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவது ரி20 போட்டியில் 64 ஓட்டங்களால் வெற்றி பெற்று, தர வரிசையில் உலகின் முதலாவது இடத்திலிருக்கும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம், ஆறு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.

அந்த வகையில் இன்றைய போட்டியை வெற்றி பெறுவதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரை வெற்றி பெறும் எதிர்பார்ப்புடன்  இலங்கை அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரை வெற்றி பெறும் நிலையில், பாகிஸ்தான் அணியுடனான தொடரை கைப்பற்றும் முதலாவது சந்தர்ப்பத்தை இலங்கை அணி பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய தினம் இலங்கை அணியில் விளையாடுகின்றனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் பகார் ஸமான் மற்றும் வஹாப் றியாஸ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதோடு, இப்திகார் அஹமட், பஹீம் அஷ்ரப் ஆகிய இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி
அவிஷ்க பெனாண்டோ, தனுஷ்க குணதிலக, மினோத் பானுக (வி.கா), தசுன் ஷானக (தலைவர்), பானுக ராஜபக்ஷ, இசுறு உதான, கசுன் ராஜித, லக்‌ஷான் சந்தகன், ஷெஹான் ஜயசூரியா, வணிந்து ஹசரங்க, நுவன் பிரதீப்

பாகிஸ்தான் அணி
பகார் ஸமான், அஹமட் ஷெஷாட், பாபர் அசாம், உமர் அக்மல், சர்பராஸ் அஹமட் (தலைவர், வி.கா.), ஆசிப் அலி, இமாத் வசிம், வஹாப் றியாஸ், சதாப் கான், மொஹமட் அமீர், மொஹமட் ஹஸ்னைன்


Add new comment

Or log in with...