நிறை குறைந்த போத்தலில் சன்குயிக்கின் 2 லீற்றர் பானம் அறிமுகம் | தினகரன்


நிறை குறைந்த போத்தலில் சன்குயிக்கின் 2 லீற்றர் பானம் அறிமுகம்

நிறை குறைந்த போத்தலில் சன்குயிக்கின் 2 லீற்றர் பானம் அறிமுகம்-Sunquick introduces evolutionary 2-liter canister for the first time in the world

உலகில் முதல் முறையாக உடனடியாக அருந்தக்கூடிய பானங்கள் வகைகளில் மிகப் புதிய படைப்பாக 02 லீற்றர்கள் கொண்ட கேன் வடிவத்தில் பானம் ஒன்றை சன்குயிக் அறிமுகப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் உள்ள பல மில்லியன் கணக்கான மக்களினால் விரும்பப்படும் சன்குயிக், இலங்கையின் முன்னணி பழச்சாறு வர்த்தகப் பெயராக பல தசாப்தங்களாக முதலிடத்தில் வகித்து வருகிறது.

அது அண்மையில் அதன் ஆர்வலர்களுக்கு புதியதொரு அறிமுகத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது. உலகில் முதல் முறையாக சன்குயிக் இரண்டு லீற்றர்கள் குறைந்த எடை கொண்ட PET போத்தலில் அடைக்கப்பட்ட 12 மாத கால காலாவதி திகதியைக் கொண்ட ஒரு பம்ப் மூலம் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலான பழச்சாறு கொண்ட கொள்கலன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் அறிமுக நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் கடந்த வாரம் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது, சன்குயிக் மென்பானத்தின் உள்நாட்டு விநியோகத்தரான C W மெக்கி பிஎல்சி மற்றும் டென்மார்க்கின் தாய் நிறுவனமான CO-RO A/S இனால் இணைந்து கொண்டாடப்பட்டது.

இரண்டு நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்தப் புதிய தரமுயர்த்தப்பட்ட கொள்கலன்களின் நன்மைகள் பற்றிக் கருத்து வெளியிட்டனர். அதன் உயர்மட்ட உற்பத்திகள் வகைகளில் இதுவும் ஒன்றாகத் திகழும்.

இந்தப் புதிய கொள்கலன்கள் மூலம் பழச்சாறு வகைகளுக்கு அதன் ஒட்டுமொத்த செயற்பாட்டுக் காலப்பகுதியிலும் மிகச் சிறந்த பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதோடு, அது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியிலும் கொள்கலனைத் திறந்த பின்னரான காலப்பகுதியிலும் அதன் பாதுகாப்பு அவ்வாறே பேணப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போத்தலின் கைப்பிடி மற்றும் பம்ப் ஆகியவற்றினால் பாவனையாளர்களுக்கு மேலும் வசதியாக அதனைப் பயன்படுத்த முடியும். கொள்கலன்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருளானது, எடை குறைந்த, குறைந்த காபன் வெளியேற்றத்தை வழங்கக்கூடிய ஒரு மூலப்பொருளாகும். அத்தோடு, புதிய டெட்ரா பெக் (Tetra pack) ஒன்றும் இத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு இலகுவான பொதி செய்யும் முறை ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளது. பருகுவதற்கு உடனடியாகத் தயாரான உற்பத்தி ஒன்று (RTD) என்ற வகையில் சன்குயிக் டெட்ரா பக் ஆனது, சிறிய, எடைகுறைந்த மற்றும் நீண்டகாலம் பாவிக்கக்கூடிய வகையில் பொதி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக, அதேவேளை சுவை நிறைந்த சன்குயிக் பானத்தை எப்போதும் எங்கும் பருகக்கூடிய வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளது. இந்தப் புதிய டெட்ரா பெக் ஆனது, 200 மி.லீ மற்றும் 125 மி.லீ ஆகிய அளவுகளில் கிடைக்கிறது. சன்குயிக்கின் ஒரேஞ்ச் முதல் மிக்ஸ்புரூட் வகையான அனைத்து சுவை நிறைந்த பழச்சாறு சுவைகளிலும் இது கிடைக்கிறது.

வரையறுக்கப்பட்ட சன்குயிக் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. மங்கள பெரேரா இங்கு இடம்பெற்ற வைபவத்தில் உரைநிகழ்த்துகையில், ‘சன்குயிக் மென் பானத்தின் புதிய இரண்டு லீற்றர்கள் கொண்ட கொள்கலன்களை இலங்கையில் அறிமுகப்படுத்துவதில் சன்குயிக் வர்த்தகப் பெயர் இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் புதிய கொள்கலன்களானது, தரமுயர்த்தப்பட்ட அதிநவீன பொதி செய்தல் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இவை இந்தக் கொள்கலன்களை அறிமுகப்படுத்தும் முதலாவது சந்தையாக இலங்கையின் நீண்டகால சன்குயிக் பிரியர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்தப் புதிய கொள்கலன் மற்றும் டெட்ரா பக் ஆகிய இரண்டும் வாடிக்கையாளர்களின் வசதிகளை கருத்திற் கொண்டே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய உற்பத்திகள் வாடிக்கையாளர்களிடையே வெகு விரைவில் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்ளும் என நாம் எதிர்பார்க்கின்றோம்’ என்று கூறினார்.

இந்தப் புதிய படைப்புகளானவை, சன்குயிக்கின் முகாமைத்துவம் உலகளாவிய வாடிக்கையாளர்களின் தேவைகளை கவனமாக ஆராய்ந்து அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தொழில் வல்லுநர்கள், சமையல் கலை நிபுணர்கள் ஆகிய அனைவரதும் மற்றும் ஏனைய பல நிபுணர்களின் கருத்துக்களைக் கவனத்திற் கொண்டு அவற்றை ஆராய்ந்த பின்னரே உணவுத்துறையில் முன்னணி வகிக்கும் பல்வேறு தேவைகளையும் முன்வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த செயற்பாட்டிலும் ஹொரணையில் அமைக்கப்பட்டுள்ள மிகப்புதிய போத்தலில் அடைக்கும் தொழிற்சாலை முக்கிய பங்கை வகித்து வருகிறது.

இந்தப் புதிய உற்பத்தி இயந்திரங்கள் தொகுதியானது, சர்வதேச வளர்ச்சியடைந்த நாடுகளின் தராதரங்களுக்கு ஏற்ற வகையில் உற்பத்தியினால் கோரப்படும் தராதரங்களைக் கொண்டுள்ளது. உலக மட்டத்தில் வருகைதந்த தர உறுதிப்பாட்டுக் குழுவினர் இந்த சர்வதேச தரத்தை எந்த வகையிலும் குறைத்துவிட சிறியதொரு வாய்ப்பையும் வழங்கப்படவில்லை.

1966 அம் ஆண்டில் டென்மார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்ட சன்குயிக் மென்பானமானது, இலங்கையில் சுமார் 42 வருடங்களாக மகிழ்ச்சியான தருணங்களையும், நினைவுகளையும் சகல வாடிக்கையாளர்களின் இல்லங்களிலும் உருவாக்கியுள்ளது. இலங்கையில் பழச்சாறு மற்றும் ஸ்குவாஷ் கோடியல் வகைகளில் 70% க்கும் அதிகமான சந்தையை சன்குயிக் கொண்டுள்ளதோடு, பல்வேறு சுவைகளிலும் தயாரிக்கப்படும் இயற்கையான பழச்சாறு வகைகளின் தரத்தினால் இது அனைவர் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.


Add new comment

Or log in with...