சிறுமியை துஷ்பிரயோகிக்க முயன்ற சமாதான நீதவான் உள்ளிட்ட இருவர் கைது | தினகரன்

சிறுமியை துஷ்பிரயோகிக்க முயன்ற சமாதான நீதவான் உள்ளிட்ட இருவர் கைது

கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சமாதான நீதவான் உட்பட இருவரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்தனர்.

கடந்த சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் தனியார் கல்வி  நிலையத்திற்குச் சென்றுவிட்டு பேருந்தில் வந்த சிறுமி கண்டாவளை பிரதேச செயலகம் அருகில் இறங்கி வீடு செல்வதற்கு நடந்த சென்ற போது வீதியில் இருபுறமும் உள்ள பற்றைக்குள் மறைந்திருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த சமாதான நீதவான் குறித்த சிறுமியை வாயை பொத்திப் பிடித்தப்படி பற்றைக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அவருடன் பிரிதொரு நபரும்  சென்றுள்ளார்.

இதன் போது குறித்து சிறுமி கதறி கூக்குரல் எழுப்பிய போது இழுத்துச் சென்றவரின் கையை கடித்து விட்டு வீதிக்கு தப்பியோடியுள்ளார். இதன்போது சிறுமியின் சகோதரனும் அவ் வீதியால் பயணித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் சகோதரன் அவர்களை தாக்குதவதற்கு விரைந்த போது ஒருவர் தப்பிச் சென்ற நிலையில்  ஒருவரை தாக்கியுள்ளார்.

பின்னர் கிளிநொச்சி  பொலிஸ் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு சிறுமி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பொலிஸாரின் நேற்றைய தினம் சமாதான நீதவான் உட்பட இருவரையும் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்


Add new comment

Or log in with...