ஐ.தே.க. முதலாவது கூட்டத்தில் 5 இலட்சம் பேர் பங்கேற்பர் | தினகரன்


ஐ.தே.க. முதலாவது கூட்டத்தில் 5 இலட்சம் பேர் பங்கேற்பர்

ஐ. தே. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 05 இலட்சம் பேர் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். இக்கூட்டம்  

நாளை மறுதினம் (10) வியாழக்கிழமை காலிமுகத் திடலில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

கொழும்பு, வொக்ஷேல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மகாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார்.  

இது பற்றி மேலும் தெரிவித்த அமைச்சர்: இம்முறை ஐ. தே.க. நடத்தும் இக்கூட்டத்தில் வரலாற்றில் பெருமளவு மக்கள் பங்குபற்றுவர். இக்கூட்டத்தில் ஐ.தே.முன்னணி மற்றும் அதனோடு இணைந்த கட்சிகள் அமைப்புகளும்  கலந்துகொள்ளவுள்ளன.  புதிய அரசியல் புரட்சியொன்றில் பங்கெடுக்கவுள்ள அனைத்து மக்களும் இக்கூட்டத்தில் பங்குகொள்வர்.

கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் ஐ.தே.கவில் இணைந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.   (ஸ)  

(லோரன்ஸ் செல்வநாயகம்)    


Add new comment

Or log in with...