50 ஆவது முதுகெலும்பு சீராக்கல் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனைபடைத்த லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் | தினகரன்


50 ஆவது முதுகெலும்பு சீராக்கல் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனைபடைத்த லங்கா ஹொஸ்பிட்டல்ஸ்

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் முதுகெலும்பு சீராக்கல் சார்ந்த 50 சத்திர சிகிச்சைகளை (Minimally Invasive Spinal Fusion Surgeries) வெற்றிகரமாக மேற்கொண்டு தமது சாதனைப் பட்டியலில் மேலுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவில் இவ்வாறான திறமையை வெளிப்படுத்திய இலங்கையின் ஒரே மருத்துவமனை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் ஆகும்.

முதுகெலும்பு சீராக்கல் சத்திரசிகிச்சை என்பதன் அர்த்தமானது, முதுகெலும்பு சார்ந்த நோய்களுக்கு பயன்படுத்தப்படும் வலியும் காயங்களும் குறைந்த ஒரு வகை அதி நவீன சத்திரசிகிச்சை முறையாகும். சத்திர சிகிச்சையின்போது நரம்புகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு நரம்புகள் கண்காணிப்பு மற்றும் நரம்புகள் வழிகாட்டல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய சத்திரசிகிச்சையின் மூலம் குணமடைவதை காட்டிலும் துரிதமாக நலம் பெறுவதற்கு இந்த நடைமுறை பெரும் உந்துசக்தியாகும். “லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் இவ்வாறான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதில் முன்னேறியுள்ளதுடன் இச் சத்திரசிகிச்சையில் மேற்பட்ட தரத்தில் உயர் தொழில்நுட்பத்தின் துணையுடன் நியாயமான கட்டணத்தில் மேற்கொள்ளும் தெற்காசியாவின் ஒரு சில மருத்துவமனைகளில் ஒன்றாக இருப்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும். இதுவரை நாம் மேற்கொண்ட சத்திரசிகிச்சைகளின் எண்ணிக்கையே எமது நரம்பியல் மருத்துவ நிபுணர்களின் திறமைக்கும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் மேன்மைக்கும் சான்றுதல் பகிர்வதாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் பிரசாத் மெதவத்த தெரிவித்தார்.

“லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் இவ் வகை சிகிச்சைகளை குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளும் தெற்காசியாவின் ஒரே மருத்துவமனை எனலாம். லங்கா ஹொஸ்பிட்டலில் இச் சிகிச்சையினை ரூ 500,000 இலட்சத்தில் செய்து கொள்ள முடிகின்ற போதிலும் சிங்கப்பூரிலோ அல்லது உலகில் வேறொரு நாட்டில் இச் சிகிச்சையை மேற்கொள்வதற்கு சுமார் ஒரு கோடி ரூபா செலவாகும்.

இந்த மருத்துவமனையிலுள்ள உயர் தரத்திலான MRI ஸ்கேன் பரிசோதனையின் மூலம் சிகிச்சைக்கு முன்னர் வியாதியை சரியாக இனங்காண முடிகின்றமையும் கூடுதல் வசதியாகும்” என நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...