EMUI 9.1 உடன் Huawie P30 Lite புதிய அனுபவம் | தினகரன்


EMUI 9.1 உடன் Huawie P30 Lite புதிய அனுபவம்

EMUI 9.1 உடன் Huawie P30 Lite புதிய அனுபவம்-Huawei P30 Lite Comes with EMUI 9.1

புத்தாக்கம் மிக்க ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான Huawei, பலத்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ள தனது P30 Lite ஸ்மார்ட்போனை தரமுயர்த்தும் வகையில் முற்றிலும் புதிய EMUI 9.1 இனை ஒருங்கிணைப்பு செய்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட Huawei P30 Lite, அதன் தலைசிறந்த வடிவமைப்பு, Peacock Blue, Midnight Black மற்றும் Pearl White ஆகிய வர்ணங்களில் கண்ணைக்கவரும் தெரிவு காரணமாக தனித்துவம் பெற்று விளங்குகின்றது. P30 Lite வழங்கும் அனுபவம் அதன் பாவனையாளர்களை பிரமிப்பிலும், பரவசத்திலும் மூழ்கிப் போகச் செய்வதுடன், அது கொண்டுள்ள HUAWEI FullView Display மற்றும் நவீன பாணியிலான DewDrop வடிவமைப்பு ஆகியன தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன.

ஒட்டுமொத்த அம்சங்களிலும் தலைசிறந்த ஸ்மார்ட்போன் என்ற தனித்துவத்திற்குச் சான்றாக P30 Lite ஆனது பாவனையாளர்களுக்கு மிகவும் எளிமையான, மிகவும் உள்ளுணர்வுமிக்க பயனர் அனுபவத்தை ஏற்படுத்தி, சிறப்பான பெறுபேற்றுத்திறனை ஊக்குவிக்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் Huawei EMUI 9.1 இனை தற்போது உள்ளடக்கியுள்ளது.   

Huawei னுநஎiஉந இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியூ இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், 'டிஜிட்டல் உலகினைப் பொறுத்தவரையில் முக்கியமான வரவாக ஸ்மார்ட்போன்கள் மாறியுள்ளதுடன், Huawei P30 Lite ஆனது எமது தொழில்நுட்பக் குடும்பத்தில் கூடுதல் வசீகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர் ரக மற்றும் உயர் செயற்திறன் கொண்ட அனுபவத்தை P30 Lite பாவனையாளர்களுக்கு வழங்குவதுடன், அனைத்திற்கும் மேலாக இத்தகைய தொழில்நுட்ப அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனை கட்டுபடியாகும் விலையில் வாங்கிக் கொள்ள இயலும் வாய்ப்பினையும் அதிகரிக்கும் வகையில் அதிநவீன Huawei EMUI 9.1 இனை நாம் ஒருங்கிணைத்துள்ளோம்," என குறிப்பிட்டார். 

இதை விட, Huawei P30 Lite இன் புதிய விலையானது ஸ்மார்ட்போன் நுண்ணறிவுத்திறன் அனுபவத்தை இன்னும் அதிக எண்ணிக்கையான பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள இடமளிக்கின்றது. நம்ப முடியாத அதன் விலை மற்றும் வசீகரிக்கும் அம்சங்கள் காரணமாக இந்த டிஜிட்டல் யுகத்தில் பாவிக்கக்கூடிய கட்டுபடியாகின்ற, உயர்ந்த அளவில் நவீனமயமான மற்றும் சௌகரியமான ஸ்மார்ட்போனாக P30 Lite தனித்துவத்துடன் திகழ்ந்து வருகின்றது.

24 ஆP விசாலமான கோண வில்லைகள் மற்றும் 8 ஆP அதிவிசால கோண வில்லைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள P30 Lite மூன்று பின்புற கெமராக்களுடன் “See More, See Further” என்ற தனது எண்ணக்கருவுக்கு Huawei உந்துசக்தி அளித்துள்ளதுடன், அதன் பிரத்தியேகமான 2MP ‘Bokeh’ வில்லைகளின் துணையுடன் எந்தவொரு படத்தையும், சாதனத்தின் சுருக்கமான சட்டகத்தினுள் படம் பிடித்துக் கொள்வதற்கு பாவனையாளர்களுக்கு இடமளிக்கின்றது. P30 Lite இன் ஈர்க்கின்ற கலப்பு விரிவாக்கம் (Hybrid Zoom) 3 மடங்கு அதிகரித்த விரிவாக்க அனுபவத்தைத் தருகின்றது. இந்த சாதனத்தின் இரவு இயக்க முறைமையானது (Hand-Held Super Night mode) மங்கலான வெளிச்ச நிலைமைகளில் எடுக்கின்ற புகைப்படங்களுக்கு உயிரோட்டத்தை ஏற்படுத்துகின்றது. இவை அனைத்திற்கும் மேலாக, இச்சாதனத்தின் 32MP முன்பக்க கெமராவின் துணையுடன் செல்ஃபி புகைப்படங்களை எடுக்கும் தருணங்கள் உண்மையிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்டதாக அமைந்துள்ளன என்பதுடன், அதிநவீன 3D மெருகேற்றலுடன் கூடிய செல்ஃபி படங்களை துல்லியமாகவும், ஆழமான விபரங்களுடனும் எடுத்துக் கொள்ள முடியும்.

P30 இன் super smart display தொழில்நுட்பமானது விசாலமான 6.15 அங்குல முகத்திரை அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், Screen-to-Body (திரைக்கும் சாதனத்துக்குமான விகிதத்தின்) உதவியுடன் 90% இற்கும் அதிகமான முகத்திரை விகிதத்தை வழங்குகின்றது. பாவனையாளர்களுக்கு அவர்களுடைய செயற்பாடு, வீடியோ மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்திற்கு உயிரோட்டம் வழங்கி, விரிவான, சௌகரியமான அனுபவத்திற்கும் இடமளிக்கின்றது.

Huawei இன் மிகச் சிறந்த 2312x1080pA உயர் FHD+ Resolution தொழில்நுட்பத்தையும் இது வழங்குவதுடன், sRGB Color Output உடன் இணைந்து அழகான, விரிவான வண்ணமய துல்லிய திரை அனுபவத்தையும் பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.   

செயற்கை நுண்ணறிவின் சக்தியைக் கொண்டுள்ள முக அடையாள தொழில்நுட்பமானது (Instantaneous face unlock technology) பாவனையாளர்கள் ஒரே பார்வையில் தமது சாதனத்தை ரடெழஉம செய்ய இடமளிக்கின்றது. அதனுடன் இணைந்தவாறு சௌகரியமாக அமையப்பெற்றுள்ள, துல்லியமான பின்புற விரல் அடையாள சென்சார் தொழில்நுட்பமானது பயனர்கள் P30 Lite ஸ்மார்ட்போன்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும் இயக்குவதை உறுதி செய்கின்றது. 

P30 Lite கொண்டுள்ள 6GB RAM மற்றும் 128GB ROM ஆகியன சாதனத்தின் மிகச் சிறந்த பெறுபேற்றுத்திறனுக்கு பங்களிக்கின்றன. Huawei Kirin 710 இன் வலுவூட்டலும் இதற்கு உண்டு. மேலும், புதிய EMUI 9.1  உடன் கூடிய GPU Turbo ஆனது தங்குதடையின்றிய Gaming உச்சமயமாக்கத்துடன், சீரான, வேகமான மற்றும் சிறப்பான கிராபிக்ஸ் அனுபவங்களையும் பயனர்களுக்கு வழங்குகின்றது.  

Huawei EMUI 9.1 தரமுயர்வுடன் கூடிய P30 Lite, இலங்கையில் உள்ள அனைத்து Huawei அனுபவ மையங்கள், சிங்கர் காட்சிறையகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட டயலொக் ஆசியாட்டா மற்றும் மொபிடெல் காட்சியறைகளில் கிடைக்கின்றன.

ரூபா 47,999 எனும் விலையில் நாடு முழுவதிலும் கிடைக்கப்பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...