Honeycomb Series அறிமுகம் செய்யும் E-Tel | தினகரன்


Honeycomb Series அறிமுகம் செய்யும் E-Tel

Honeycomb Series அறிமுகம் செய்யும் E-Tel -E-Tel Honeycomb iPC

இலங்கையின் முன்னோடி தொழில்நுட்ப மற்றும் பெறுமதிசேர் சேவைகள் வழங்குநரான, பிரான்டெல் லங்கா நிறுவனமும், E-Tel நிறுவனமும் ஹனிகோம்ப் தொடரான E-Tel i-PC இன் அறிமுகத்தை அறிவித்துள்ளது.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) ஒரு சிரேஷ்ட ஆலோசகரான இந்திக டி சொய்சா இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த வர்த்தக அடையாளத்தின் வணிகப் பங்குதாரர்களும், பங்காளிகளும், ஊடகவியலாளர்களும் அங்கு சமூகமளித்திருந்தனர்.

Honeycomb Series அறிமுகம் செய்யும் E-Tel -E-Tel Honeycomb iPC

E-Tel இன் மினி PC க்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இடம், செலவினம் மற்றும் சக்திவளம் என்பனவற்றை சேமிப்பது அவசியமாகின்றது. இதுவே வர்த்தகத் துறையினர் இதனைப் பெரிதும் விரும்புவதற்கான காரணமாகும். மினி PC பிரிவின் பிரான்டெல் உற்பத்திப் பொருளின் சமீபத்திய சேர்க்கை, E-Tel ஹனிகோம்ப் இணைப்பாகும். இந்த i-PC மூன்று வருடகால மிக நீண்ட உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது.

Honeycomb Series அறிமுகம் செய்யும் E-Tel -E-Tel Honeycomb iPC

மூன்று வருடகால மிக நீண்ட உத்தரவாதம், இலகுவில் எடுத்துச் செல்லும் தன்மை என்பனவற்றுடன் பெருமளவு இடத்தைச் சேமிக்கும் தன்மையையும் இது கொண்டுள்ளது. i-PC யை இலகுவில் இயக்க முடியும். இதன் செயற்பாடுகள் அனைத்தும் சிக்கல் அற்றவை. குறைந்த சக்தி வளத்தையே தனது இயக்கத்திற்கு உபயோகிக்கும் மினி PC நியாயமான விலையில் வழங்கப்படுவதோடு, பணத்திற்கேற்ற பெறுமதியையும் பெற்றுக் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Honeycomb Series அறிமுகம் செய்யும் E-Tel -E-Tel Honeycomb iPC

அதன் பயன்தரும் தன்மையின் மட்டம், கலையம்சம் பொருந்திய வடிவமைப்பு, ஒத்திசையும் தன்மை என்பன E-Tel ஹனிகோம்ப் தொடர் சாதனங்களை, அதன் தரத்தைச் சேர்ந்த ஏனைய சாதனங்களில் இருந்து தனித்துவமானதாகக் கருதச் செய்துள்ளன. இதே நிலைமை நீடிக்குமானால், நாட்டின் பெரிதும் விரும்பப்படும் மினி PC ஆக விரைவில் இது திகழும் என அந்நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் துரித இலக்கம் மற்றும் ழுளெனைந என்பன மூலம் E-Tel அதன் வாடிக்கையாளருக்கு உச்சக்கட்ட சேவையை வழங்கி வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளரின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கென, அர்ப்பணிப்புடனான சேவையாளர் குழுவினர் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

15 வருடகால வரலாற்றில் 2.5 மில்லியன் வாடிக்கையாளருக்கு E-Tel சேவையாற்றியதோடு, நம்பகமான, பொறுப்புணர்ச்சியுடன் கூடிய வர்த்;தக அடையாளம் எனவும் அது கருதப்படுகிறது. அதன் உற்பத்திப் பொருட்களின் நீண்டகால சேவை, சிக்கனமான தன்மை, நாட்டின் சகல மாவட்டங்களிலும் வழங்கப்படும் விற்பனைக்குப் பிந்திய நம்பிக்கையான சேவை என்பனவற்றுக்கு அது பிரபல்யம் பெற்றுள்ளது.

மேலதிக தகவல்களை www.brantel.lk அல்லது பிரான்டெல் வாடிக்கையாளருக்கான துரித இலக்கங்களை 0112024666 / 0115515600 அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


Add new comment

Or log in with...