Thursday, April 25, 2024
Home » SLvAFG: பெத்தும் நிஸ்ஸங்க சாதனை; இரட்டைச் சதம் கடந்த முதல் இலங்கை வீரர்

SLvAFG: பெத்தும் நிஸ்ஸங்க சாதனை; இரட்டைச் சதம் கடந்த முதல் இலங்கை வீரர்

- 2000 ஆம் ஆண்டு ஜயசூரியவின் சாதனை 24 வருடங்களின் பின் முறியடித்தார்

by Rizwan Segu Mohideen
February 9, 2024 6:19 pm 0 comment

கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வரும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 200 ஓட்டங்களை கடந்துள்ளார்.

பெத்தும் நிஸ்ஸங்க 139 பந்துகளில் 20 பெளண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடனேயே இந்த 210 ஓட்டங்களை பெற்றார். இதன்படி ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் பெற்ற 10 ஆவது வீரராகவும் அவர் பதிவானார்.

அந்த வகையில் இலங்கை அணி வீரர் ஒருவர் 200 ஓட்டங்களை கடந்த முதல் தடவை இதுவாகும்.

இதற்கு முன்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய 2000 இல் சார்ஜாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 189 ஓட்டங்களை பெற்றிருந்தமையே இலங்கை அணி வீரர் ஒருவர் ஒரு நாள் போட்டியொன்றில் பெற்ற அதிகூடிய ஓட்டமா இருந்தது.

குறித்த சாதனையை 24 வருடங்களின் பின் முறியடித்த பெத்தும் நிஸ்ஸங்க, 200 ஓட்டங்களை கடந்த முதலாவது இலங்கை அணி வீரர் என்ற பெருமையையும் தனதாக்கியுள்ளார்.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SLvAFG; நாணயச் சுழற்சியில் ஆப்கான் வெற்றி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT