'இலங்கையில் பாரதி' ஆய்வு நூல் இன்று வெளியீடு | தினகரன்

'இலங்கையில் பாரதி' ஆய்வு நூல் இன்று வெளியீடு

படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ( ஆய்வு ) நூலின் வெளியீட்டு அரங்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் விநோதன் மண்டபத்தில் இன்று 05ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30மணிக்கு நடைபெறும்.  

மகாகவி பாரதியின் படைப்பாளுமை பண்புகள் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்ட இந்நூலின் உள்ளடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர் இதழில் 40வாரங்கள் தொடராக வெளியானது. அத்துடன் அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழிலும் மறுபிரசுரமானது. 

இலங்கையில் பாரதிநூல் வெளியீட்டரங்கு செல்வி பாமினி செல்லத்துரையின் வரவேற்புரையுடன், ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தைஜோசப் தலைமையில் ஆரம்பமாகும்.  யாழ். காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் நூல்வெளியீட்டுரை நிகழ்த்துவார்.  

ஞானம்மாத இதழ் ஆசிரியர் தி. ஞானசேகரன், பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். ஜெயசீலன், எழுத்தாளர் கௌரிஅனந்தன், இலக்கிய ஆர்வலர் வானதி ஆறுமுகம் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரை நிகழ்த்துவர்.  

புரவலர் ஹாஸிம்உமர்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்வார்.    கலை, இலக்கிய ஆர்வலரும் எழுத்தாளருமான உடுவை தில்லைநடராஜா, ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர்) இளங்கீரனின் புதல்வர் மீலாத் கீரன், திருமதி ஜெயந்தி விநோதன் ஆகியோர் நூலின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொள்வர்.  

நூலாசிரியர் முருகபூபதி ஏற்புரை நிகழ்த்துவார். நிகழ்ச்சியில் இலக்கிய கலந்துரையாடலும் தேநீர் விருந்தும் இடம்பெறும்.


Add new comment

Or log in with...