இதயத்தை தூய்மையாக்கி ஆத்மா அழகை பெருக்கு | தினகரன்


இதயத்தை தூய்மையாக்கி ஆத்மா அழகை பெருக்கு

மகாத்மா காந்தியின் பொன் மொழிகள்

மனிதனைப் பிடிக்கும் நோய்களிலெல்லாம் மிகமிகக் கொடியது அச்சம் எனும் பேய்தான்!

நடுத்தர வர்க்க மக்கள் பிழைப்பிற்காக அயல்நாடு செல்ல நேர்வது நாட்டின் நலத்திற்கு நல்லதல்ல.

உண்மையான அலங்காரம் என்பது உடல் முழுவதும் உலோகத்தையும், கற்களையும் சுமந்து கொண்டிருப்பதல்ல... இதயத்தைத் தூய்மைப்படுத்தி ஆத்மாவின் அழகைப் பெருக்கிக் கொள்வதேயாகும்!

அன்பு என்பது ஒரு போதும் கேட்பதில்லை.... எப்போதுமே அது கொடுத்துக்கொண்டு இருக்கிறது.  சத்தியமே எனது கடவுள்!.... அஹிம்சையே கடவுளைக் காண வழி!  தாய்நாட்டின் சேவைக்காக என் வாழ்வு அனைத்தையும் நான் அர்ப்பணித்திருக்கிறேன்.... இந்தச் சேவை இல்லாவிடில் என் வாழ்க்கையே எனக்குத் தாங்க முடியாத சுமையாகிவிடும்!

கோழைகளின் அஹிம்சையைவிட வீரர்களின் அஹிம்சையே நமக்குத் தேவை.

இசை எனக்கு அமைதியளிக்கிறது. ஏதோ ஒன்றைப்பற்றி நான் பரபரப்படையும் சமயத்தில் இன்னிசையானது உடனே எனது உள்ளத்திற்கு அமைதி தந்தது உண்டு. கோபத்தை வெல்வதற்கு இசை எனக்குப் பேருதவி செய்கிறது.

கடமையைச் செய்யாமல் உரிமைகளைத் தேடினால் அவை கானல் நீராகிவிடும்!

தொகுப்பு :
என்.சுப்பிரமணியன்


Add new comment

Or log in with...