Wednesday, April 24, 2024
Home » சுதந்திர தின வாரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மக்கள் வங்கியின் பரிசு

சுதந்திர தின வாரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மக்கள் வங்கியின் பரிசு

by Rizwan Segu Mohideen
February 8, 2024 4:26 pm 0 comment

மக்கள் வங்கி, சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில் பிரசவமான குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கியுள்ளது

மக்கள் வங்கி, 76 ஆவது சுதந்திர தினத்தை மிகவும் எளிமையான வைபவத்துடன் தனது தலைமை அலுவலகத்தில் கொண்டாடியுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து நாடளாவியரீதியில் பல தொடர் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று ஆரம்பிக்கப்படுகின்ற மக்கள் வங்கியின் ‘சுதந்திரத்தின் உதயம்’ என்ற நிகழ்ச்சித்திட்டமானது இந்த ஆண்டிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்த கோட்பாட்;டின் கீழ், பெப்ரவரி 1 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ரூபா 2,000ஃ- பெறுமதியான ‘இசுரு உதான’ பரிசுச் சான்றிதழை மக்கள் வங்கி அன்பளித்து வருகின்றது.

தேசத்தின் பெருமை உணர்வை ஊக்குவித்து, தமது பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பெற்றோரை ஊக்குவிக்கும் நோக்குடன், 2006 ஆம் ஆண்டில் இந்நிகழ்ச்சித்திட்டத்தை மக்கள் வங்கி ஆரம்பித்திருந்தது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழுடன், இப்பரிசுச் சான்றிதழை உபயோகித்து மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ‘இசுரு உதான’ சிறுவர் சேமிப்புக் கணக்கினை ஆரம்பிக்க முடியும். மக்கள் வங்கியின் ஊழியர்கள் வைத்தியசாலைக்கு நேரடியாக வருகை தந்து புதிதாக பிறந்துள்ள குழந்தைகளுக்கு சான்றிதழ்களை பரிசாக வழங்குவது இந்நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் பொரளை டி சொய்சா வைத்தியசாலை ஆகியவற்றுக்கு நேரடியாக விஜயம் செய்த மக்கள் வங்கித் தலைவர் சுஜீவ ராஜபக்ச அவர்கள் இதன் அடையாளமாக ‘இசுரு உதான’ பரிசுச் சான்றிதழ்களையும் ஏனைய பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

இதை விட, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் சுகாதார வசதிகளை புனரமைப்புச் செய்வதற்கு உதவியாக காசோலையொன்றையும் மக்கள் வங்கி கையளித்துள்ளது.

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண, பொரளை டி சொய்சா மகளிர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் கே.எம். நிஹால், வைத்தியசாலையின் ஊழியர்கள், மக்கள் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மேற்குறிப்பிட்டதற்கு இணங்க, நாட்டிலுள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் ‘சுதந்திரத்தின் உதயம்’ நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT