Home » பிரான்ஸ், ஐ.அ.இ, இந்திய யுத்த விமானங்கள் பயிற்சி

பிரான்ஸ், ஐ.அ.இ, இந்திய யுத்த விமானங்கள் பயிற்சி

by gayan
February 4, 2024 6:14 am 0 comment

‘டெசேர்ட் நைட்’ பயிற்சி என்ற பெயரில் ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளதும் விமானப்படைகள் கூட்டுப் பயிற்சியொன்றை நடத்தியுள்ளன.

விமானப் படைகளின் வலிமையை வெளிப்படுத்துவதோடு வளர்ந்து வரும் இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு நடாத்தப்பட்ட இப்பயிற்சியின் போது மூன்று நாடுகளதும் விமானப்படைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மற்றும் செயற்பாட்டு நிலைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அத்தோடு இப்பயிற்சியில் பங்குபற்றியவர்களுக்கு இடையில் செயல்பாட்டு அறிவு, அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ளவும் முடிந்துள்ளது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் விமானப்படை விமானங்கள் அல் தப்ரா விமான தளத்தை அடிப்படையாகக் கொண்டும் இந்திய விமானப் படை விமானங்கள் இந்திய விமானத் தளங்களில் இருந்து இயக்கப்பட்டு அரபுக்கடல் பரப்பிலும் ஒருங்கிணைந்த வகையில் இப்பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT