3rd ODI: SLvPAK; 2-0 என தொடரை வென்றது பாகிஸ்தான் | தினகரன்


3rd ODI: SLvPAK; 2-0 என தொடரை வென்றது பாகிஸ்தான்

3rd ODI: SLvPAK; 2-0 என தொடரை வென்றது பாகிஸ்தான்-3rd ODI-SLvPAK-PAK Won by 5 Wickets

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

கராச்சியில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி  பெற்ற இலங்கை அணியின் தலைவர் லஹிரு திரிமான்ன, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதற்கமைய ஒதுக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 297 ஓட்டங்களை பெற்றது.

தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஓட்ட பெறுதியை பதிவு செய்த தனுஷ்க குணதிலக 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 133 ஓட்டங்களை பெற்றார்.

இறுதி ஓவர்களில் களம் புகுந்த தசுன் ஷானக 24 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றார். அறிமுக வீரர் மினோத் பானுக, மற்றும் அணியின் தலைவர் லஹிரு திரிமான்ன ஆகியோர் தலா 36 ஓட்டங்களை பெற்றனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹம்மட் அமீர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு 298 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் பகார் ஷமான் 76 ஓட்டங்களையும், ஆபித் அலி 74 ஓட்டங்களையும், ஹரீஸ் சொஹைல் 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் நுவன் பிரதீப் 2 விக்கெட்டுகளையும், ஷெஹான் ஜயசூரிய, வணிந்து ஹசரங்க, லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அதற்கமைய இப்போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணி, 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், ஏனைய இரு போட்டிகளையும் வென்று, 2-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாயகனாக ஆபித் அலியும், தொடரின் நாயகனாக பாபர் அஸாமும் தெரிவு செய்யப்பட்டனர்.

இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி லாஹூரில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது போட்டி ஒக். 07, 3ஆவது போட்டி ஒக். 09 ஆகிய தினங்களில் அதே மைதானத்தில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை 297/9 (50.0)
தனுஷ்க குணதிலக 133 (134)
தசுன் ஷானக 43 (24)
மினோத் பானுக 36 (39)
லஹிரு திரிமான்ன 36 (53)

மொஹம்மட் அமீர் 3-50 (10.0)
மொஹம்மட் நவாஸ் 1/24 (4.0)
உஸ்வான் ஷின்வாரி 1/41 (8.0)

பாகிஸ்தான் 299/5 (48.2)
கார் ஷமான் 76 (91)
ஆபித் அலி 74 (67)
ஹரீஸ் சொஹைல் 56 (50)

நுவன் பிரதீப் 2/53 (10.0)
ஷெஹான் ஜயசூரிய 1/39 (7.0)
வணிந்து ஹசரங்க 1/54 (10.0)
லஹிரு குமார 1/55 (7.0)

ஆட்ட நாயகன்: ஆபித் அலி
தொடரின் நாயகன்: பாபர் அஸாம்


Add new comment

Or log in with...